பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
149
இராசசிம்மன்


ஸ்ரீ ஆகமப் பிரியன்,[1] சிவசூடாமணி’[2] என்பன போன்றவை இவனது சைவ சமயப் பற்றைக் குன்றின் மீதிட்ட விளக்குப் போல ஒளிரச் செய்கின்றன. இராசசிம்மன் சைவ சித்தாந்தத்தில் பேரறிவுடையவன் என்னும் கயிலாசநாதர் கோவில் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.[3] இவன் விருதுகளில் ஸ்ரீவாத்ய வித்யாதரன் என்பது ஒன்று. இதனால், இவன், ‘இசைக் கருவிகள் இசைப்பதில் விஞ்சையனை (வித்யாதரனை) ஒத்தனவன்’ (பெரிய இசைப் புலவன்) என்பதும் நன்கு புலனாகிறது.

“இவன், பரமேசுவரன் உறுப்புகள் யாவும் ஒன்றுகூடிமனிதனாகப் பிறந்தாற் போன்றவன், உடல் வலியிலும் பெரும் புகழிலும் நரசிம்ம அவதாரத்தை ஒத்தவன். இந்த கூடித்திரிய சூடாமணி தோவர்க்கும் பிராமணர்க்கும் செல்வம் தந்தவன்; தன் கீழ் உள்ள நிலமகளை நான்மறையாளர் நுகருமாறு செய்தவன்”[4] என்றொரு கல்வெட்டுக் கூறுகின்றது. மற்றொன்று, ‘பரம மகேசுவரனும் மகேந்திரனை ஒத்தவனுமான இராசசிம்மன் பிராமணர் கல்லூரியைத் திரும்பவும் அமைத்தான் கயிலாயத்தை ஒத்த கயிலாசநாதர் கோவில் என்னும் சந்திரசேகரர் கோவிலைக்கட்டினான்.” என்று கூறுகின்றது. பிறிதொரு கல்வெட்டில் பின்வரும் செய்தி வெட்டப்பட்டுள்ளது. “சிவபெருமானுக்குக்குகன் பிறந்தாற்போலப் பல்லவப் பேரரசனான


 1. இவனுக்கு முற்பட்ட அப்பர் காலத்திலே ஆகமங்கள் எனப்படும் தந்திர நூல்கள் இருந்தன என்பது அப்பர் பதிகத்தால் அறியக்கிடக்கிறது. 'தக்கன்தந்திரம்' ஆகமநூல் அறியாது மந்திரநூற்படி(வேதவிதிப்படி) வேள்வி செய்து சிவபிரானை அவமதித்ததால் அழிந்தான், என்று அப்பர் கூறல் காணத்தக்கது.
  “இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களோடு
  மந்திரம் மறைய தோதி வானவர்வணங்கி வாழ்த்தத்
  தந்திரம் அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று
  சந்திரற் கருள்செய்தாரும் சாய்க்காடு மேவி னாரே”
 2. இவனும் தன் தந்தையைப்போலவே கண்மணியால் செய்யப்பட்ட லிங்கத்தை மகுடமாகத் தாங்கி இருந்தான் போலும்!
 3. I.S.I.S. Vol.I pp.14-18.
 4. தந்திரம் & Tantra (Agama)