பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
162
பல்லவர் வரலாறு


சிற்பம், ஓவியம் இவற்றிற் பேரறிவு படைத்த பெருவேந்தன் என்பதற்குக் கயிலாசநாதர்கோவில் ஒன்றே போதிய சான்றாக அமைந்துள்ளது. இக் கோவில் ஏறத்தாழ வைகுந்தப் பெருமாள் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்திருத்தல் வியத்தற்குரியது. இங்குள்ள கணக்கற்ற சிற்பங்கள் சுவர்களில் இருத்தல் போலவே அக் கோவிற் சுவர்களிலும் இருத்தல் இங்கு நினைக்கத்தகும். சுருங்கக் கூறின் கயிலாசநாதர் கோவில் பல்லவரது சிற்பக்கலையை உலகத்திற்கு அறிவிக்க எழுந்த சிற்பக்கலைக்கூடம் என்னலாம்.

வடமொழிப் புலவன்

இராசசிம்மன் பேரவையில் தண்டி என்னும் வடமொழிப் புலவர் இருந்தமை முன்னரே கூறப்பட்டதன்றோ? பல்லவர் வடமொழி வாணரை நன்கு போற்றியவர் ஆவர். சிம்மவிஷ்ணு பாரவியைப் போற்றினான்; பாரவியிடம் மகேந்திரவர்மன் படித்துச் சிறந்த வடமொழிப் புலவன் ஆயினான் (?) அவருடைய பெரிய பெயரர் தண்டி என்பதால், பாரவிக்குப் பின் அவர் மகனும், பெயரனும் முறையே பல்லவர் அவைப்புலவராகவும் வடமொழி ஆசிரியராகவும் இருந்திருக்கலாம். தண்டி எழுதிய ‘காவ்யா தர்ஸம்’ என்னம் அணி இலக்கணத்தில் ‘இராசவர்மன்’ என்னும் சைவ அரசனைக் குறிப்பிட்டுள்ளார்: காஞ்சியைப் பற்றியும் பல்லவரைப் பற்றியும் ஆங்காங்குக் குறித்துள்ளார்.[1] இவற்றறோடு அவர் செய்த அவந்தி சுந்தரி கதா என்னும் நூலில் பல்லவன் காலத்து வறுமையை விளக்கியுள்ளார். இவை அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து


  1. இம் முறையைப் பின்பற்றியே இராசசிம்மன் சிறப்புகள் வரும் இடங்களில் எல்லாம் இந்நூலைத் தமிழ்ப்படுத்திய புலவர்தம் காலத்தரசனான அனபாய சோழன் சிறப்பைக் குறிக்கும் பாடல்களைத் தாமே கட்டி மேற்கோளாகக் காட்டியுள்ளார் என்பது அறியத்தகும். சான்றாக ஒன்று காண்க:

    ‘என்னேய் சிலமடவார் எய்தற் கெளியவோ
    பொன்னே அநபாயன்பொன்னெடுந்தோள்! - முன்னே
    தனவேயென்றாளும் சயமடந்தை தோளாம்
    புளவேய் மிடைந்த பொருப்பு.’