பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/184

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
164
பல்லவர் வரலாறு


இரண்டாம் பரமேசுவரவர்மன்
(கி.பி. 705–710)

இவன் இராசசிம்மன் மகன். இவனது மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று, வீரட்டானேச்சுரர் கோவிலில் காணப்படுகிறது. அதற்குப் பிற்பட்ட கல்வெட்டு ஒன்றும் கிடைக்காமையால், இவன் சிறிது காலமே அரசாண்டான் என்று கொள்ளவேண்டும். காசக்குடிப் பட்டயம் இவன் கலியை வென்றான்; அமைதியான வாழ்க்கையை நடத்தினான்; பிரகஸ்பதி விதித்த வழியில் குடிகளை நடத்தினான்; உலகத்தைக் காத்தான்[1] என்று கூறுகிறது. வேலூர் பாளையப் பட்டயம், இவன் கலியை வென்றவன் மது கூறிய விதிகளின்படி நாட்டை ஆண்டவன் என்று கூறுகிறது.[2] இவன் காஞ்சியில் உள்ள பரமேச்சுர விண்ணகரம் எனப்படும் வைகுந்தப் பெருமாள் கோவிலைக் கட்டியவன் என்று அறிஞர் அறைகின்றனர்.[3] திருவதிகையில் உள்ள சிவன் கோவிலையும் கற்களால் அமைத்தவன் இவனே என்றும் கருதுகின்றனர்.[4]


13. புதிய பல்லவர் மரபு

சில செய்திகள்

இரண்டாம் பரமேசுர வர்மனுடன் சிம்மவிஷ்ணு மரபு முடிந்து விடுகிறது. இரண்டாம் பரமேசுவர வர்மனுக்குப் பின் புதிய மரபைச் சேர்ந்த இரண்டாம் நந்திவர்மன் என்பவன் பட்டம் பெற்றதாகச் சில பட்டயங்கள் பகர்கின்றன. உதயேந்திரப் பட்டயம், இரண்டாம் பரமேசுவரவர்மனுக்குச்சித்திரமாயன் என்னும் மைந்தன் இருந்தான்; அவனுக்குப் பட்டம் கிடைக்கவேண்டுமென்று தமிழ் அரசர்


  1. S.I.I. Vol.II p.357.
  2. S.II. Vol. II p.510.
  3. R. Gopinatha Rao’s “History of Sri. Vaishnavas’ p.17.
  4. C.S. Srinivasachari’s “History and Institutions of the Pallavas’ p.15.