பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
165
சமணத் திருப்பதிகள்


முயன்றனர் என்று கூறுகிறது. கொற்றங்குடிப் பட்டயம், இரண்டாம் நந்திவர்மனுக்கு முன் இரண்யவர்மன் என்பவன் ஆண்டதாகக் கூறுகிறது. ஆனால், தண்டந் தோட்டப் பட்டயம் இதனைக் கூறாமல், இரண்யவர்மன் உலக நன்மைக்காகப் பிறந்தான் தன் பகைவரைக் காட்டிற்கு விரட்டினான்; குடிகளைச் செம்மையுறப் பாதுகாத்தான் எனக் கூறுகிறது. இந்த இரண்யவர்மன் யாவன்? கீழே உள்ள அரச மரபைக் காண்க:

சிம்மவர்மன்
சிம்மவிஷ்ணு பீமவர்மன்
மகேந்திரவர்மன் 1 புத்தவர்மன்
நரசிம்மவர்மன் 1 ஆதித்தவர்மன்
மகேந்திரவர்மன் 2 கோவிந்தவர்மன்
பரமேசுவரவர்மன் 1 இரண்யவர்மன்
நரசிம்மவர்மன் 2
பரமேசுவரவர்மன் 2
(சித்திரமாயன் - சிறுவன்?) நந்திவர்மன் 2


வைகுந்தப் பெருமாள் கோவில் சிற்பங்கள்

காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலில் உள்ள வரிசை வரிசையான சிற்பங்கள் இக்கால நிலையைப் பெரிதும் விளக்குகின்றன. அவற்றின் கீழ்ச் சில செய்திகள் செதுக்கப் பட்டுள்ளன. முதற் சிற்பம் இரண்டாம் பரமேசுவரவர்மன் இறப்பைக் குறிக்கிறது. அங்கு அமைச்சர், கடிகையார், மூலப்பிரகிருதி, இரண்யவர்மன் இவர்கள் குறிக்கப்பட்டுள்ளனர்.நான்காம் சிற்பத்தில் ஸ்ரீமல்லன், இரண்மல்லன், சங்கிராம மல்லன், பல்லவ மல்லன் இந்நால்வரும் இரண்ய வர்மன் பிள்ளைகளாகக்