பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/199

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
179
ஆறுவகையான உயிர்கள்


வைரமேகன் காஞ்சியைக் கைப்பற்றியதும் பல்லவ மல்லன் அவனிடம் பெண் பெற்று மணந்திருத்தல் வேண்டும். அவளுக்குப் பிறந்த மகனுக்குத் ‘தந்திவர்மன்’ என்னும் பாட்டன் பெயரை இட்டிருத்தல் வேண்டும் என்று முடிபு கொண்டனர்.[1]

முதலாம் கிருஷ்ணன்

இவன் தந்தி துர்க்கனின் சிற்றப்பன். தந்தி துர்க்கன் கி.பி. 725 முதல் 758 வரை ஆண்டு இறந்தான். அவற்குப் பிள்ளை இன்மையின், முதலாம் கிருஷ்ணன் தனது முதுமைப் பருவத்தில் கி.பி. 758 முதல் 772 வரை அரசனாக இருந்தான் இவன் ‘கன்னர தேவன்’ என்ற பெயரையும் கொண்டிருந்தான். இவன் தனது ‘தலகோன்’ பட்டயத்தில், தன்னைக் ‘காஞ்சிக் குணாலங்கிருதன்.....’ என்று குறித்துள்ளான். இதனால், இவன் காஞ்சி அரசனை வென்றவனாக இருக்கலாம் என்று அல்டேகர் கருதுகிறார்.[2]

பல்லவர்-கங்கர் போர்

இரண்டாம்நந்திவர்மன் காலமெல்லாம்போர்களிலேயே கழிந்தது என்னலாம். அவன் ‘உக்ரோத்யம் என்னும் வைரம் பதித்த கழுத்தணியைக்கங்க அரசனிடமிருந்து கைப்பற்றினான் என்று ஒரு பட்டயம் பகர்கின்றது.[3] பல்லவனுடன் போரிட்ட கங்க அரசன் ரீ புருஷன் என்பவன். அவன் கி.பி. 7.26 முதல் 776 வரை ஆண்டான்.[4] இப் போர் பல்லவனது 58ஆம் ஆட்சி ஆண்டில் வெளியிட்ட தண்டன் தோட்டப் பட்டயத்தில் காணப்படலால், பல்லவ மல்லனது முதுமைப் பருவத்தில் இது நடந்ததாகல் வேண்டும் எனக் கோடல் தவறாகாது.

இப் பேரைப்பற்றிக் கங்கர் கல்வெட்டுகள் கீழ்வருமாறு கூறுகின்றன; “ஸ்ரீ புருஷன் மகன் பல்லவனை ‘விளர்த்தி’ என்ற


  1. R. Gopalan’s “Pallavas of Kanchi,’ p.127
  2. Vide his “Rashtrakutas and their Times,’ p.45.
  3. S.I.I.VII pp.519-20.
  4. Vide MVK Rao’s “Gangas ofTalakad’ p.54.