பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/203

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
183
வடக்கிருத்தல்


இரண்டாம் கீர்த்திவர்மன் (கி.பி. 746-757) ஆவர். இவருடன் சாளுக்கியப் பேரரசு ஒழிந்துவிட்டது. இச் சாளுக்கியரை வென்ற இராட்டிர கூடருள் தந்தி துர்க்கன் (கி.பி. 725-758), முதலாம் கிருட்டினன் (கி.பி. 758-772). இரண்டாம் கோவிந்தன் (கி.பி. 772-730) என்போர் இவன் காலத்தவராவர். பாண்டியருள் முதலாம் இராசசிம்மன் என்ற பராங்குச மாறவர்மன் (கி.பி. 710-765), நெடுஞ்சடையன் பராந்தகன் (கி.பி. 765-790) என்பவர் இக்காலத்தவராவர்.


15. தந்திவர்மன்
(கி.பி. 775-825)

பிறப்பும் ஆட்சிக் காலமும்

தந்திவர்மன் இரண்டாம் நந்திவர்மன் மகன். இவன் இராட்டிரகூடப் பெண்மணியான ரேவா[1]வுக்குப் பிறந்தவன். இராட்டிரகூடத் தந்திதுர்க்கன் (வைரமேகன்) மகள் வயிற்றுப் பெயரன் ஆதலின், இவன் தந்திவர்மன் எனப்பட்டான். இவன் அப் பாட்டனைப் போலவே, ‘வைர மேகன் என்னும் பெயரும் பெற்றிருந்தான். இவன் பட்டயங்களும் கல்வெட்டுகளும் திருச்சிராப்பள்ளிக் கோட்டத்திலிருந்து வடக்கே திருச்சானுர் வரை பரவியுள்ளன; இறுதியிற் கிடைத்த கல்வெட்டு இவனது 51ஆம் ஆட்சி ஆண்டைக் குறிப்பதால், இவன் குறைந்தது 51ஆண்டுகள் அரசாண்டான் என்று ஆராய்ச்சியாளர் கொண்டனர்.

சிறப்பும் மணமும்

இவன் செந்தாமரைக் கண்ணனான திருமாலின் அவதாரமானவன்; அன்பு, அருள், ஈகை, ஒழுக்கம் இவற்றுக்குப் புகலிடமானவை. இவன், கதம்பர் மரபுக்கே சிரோமனியாக விளங்கிய

  1. ரேவா என்பது நறுமதை யாற்றின் பெயர்.