பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமணசமயத்தில் மகளிர்நிலை

187



என்க. இம் மூன்று போர்களாலும் பல்லவநாட்டிற்கு உண்டான ஆள் இழப்பும் பொருள் இழப்பும் சொல்லும் தகையவோ?

பல்லவர் - பாண்டியர் போர் (கி.பி. 806 - 817)

வரகுண பாண்டியன் மாறன் இராசசிம்மன் மகன். இவன் காலம் ஏறக்குறையக் கி.பி. 800 - 830 என்னலாம். இவன் கடிலன் பராந்தகன், மாறஞ்சடையன். நெடுஞ்சடையன் எனப் பல பெயர்களைக் கொண்டவன். இவன் தகடூர் அதிகனை எதிர்த்தபொழுது, தந்திவர்மன் அதிகனை ஆதரித்தான்; சேரனும் அதிகனை ஆதிரித்தான். வரகுணன் இவர்கள் அனைவரையும் தோல்வியுறச் செய்தான். வரகுணன் கல்வெட்டுகள் சோழநாடு முழுவதும் காணப்படுகின்றன. இவன் தனது 16ஆம் ஆட்சி ஆண்டில் தொண்டை நாட்டில் பெண்ணை யாற்றங்கரையில் உள்ள அரைசூரில் இருந்தபொழுது (போர்ப் பாசறையில்) அம்பா சமுத்திரம் பட்டயம் அளித்துள்ளான். இதனால் வரகுணபாண்டியன் பல்லவர் பெருநாட்டைச் சேர்ந்த சோழ நாடு முழுவதையும் கைப்பற்றியதோடு நில்லாமல், தொண்டை நாட்டில் பெண்ணையாற்றங்கரை வரை உள்ள நாட்டையும் பிடித்துக் கொண்டான் என்பதை நன்குணலாம்.[1] சோழ நாட்டில் திருச்சிராப்பள்ளி மலைக் கோவில், திருநெய்த்தானம் (தில்லை ஸ்தானம்), திருவிசலூர் என்னும் இடங்களில் வரகுணன் பட்டயங்கள் காண்கின்றன. வடக்கே இராட்டிரகூடர் படையெடுப்பும் தெற்கே பாண்டியர் படையெடுப்பும் உண்டாகிப் பல்லவன் தத்தளித்தான். தான் இராட்டிரகூடர்க்கு அடங்கிவிட்டமையாலும் வெளி அரசர் உதவி இன்மையாலும் தந்திவர்மன் தக்க உணர்ச்சியோடு பாண்டியனை எதிர்க்க முடியவில்லை.

தந்திவர்மன் அரசியல்

தந்திவர்மன், திருச்சிராப்பள்ளிக் கோட்டத்தில் ஆலம்பாக்கம் என்னும் சிற்றூர்க்கு அண்மையில் தனது பட்டப் பெயரான ‘மாற்பிடுகு’ என்பதை வைத்து ‘மாற்பிடுகு ஏரி’ ஒன்றை


  1. K.A.N. Sastry’s “Pandian Kingdom’ pp.62-63.