பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/209

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
189
சில புராணக்கதைகள்


கணக்கு என்ன? 45 காடி நெல்லுக்கு ஆண்டொன்றுக்கு 183/4 கலம் நெல் வட்டி ஆயிற்று.[1]

கோவில்கள்

மலையடிப்பட்டியில் உள்ள மலையைத் தனியாகக் குடைந்து அமைத்தவன் முத்தரையனான குவாவன் சாத்தன் என்பவன். இவ் வேலை தந்திவர்மனது 16ஆம் ஆட்சி ஆண்டில் முற்றுப் பெற்றதாகும். பல்லவ அரசன், திருச்சிராப்பள்ளிக் கூற்றத்தில் உள்ள ஆலம்பாக்கத்திற்குத் ‘தந்திவர்ம மங்கலம்’ எனத் தன் பெயரிட்டு அதனைப் பிரமதேயமாக வழங்கினான். அங்குக் கயிலாசநாதர் கோவில் ஒன்றைக் கட்டினான். இவன் வைணவன்[2] ஆயினும், சைவ - வைணவக் கோவில்கட்கு நிரம்பப் பொருள் அளித்தான். திருமங்கை ஆழ்வார் இவன் காலத்திலும் இருந்தனர் என்று சிலர் கூறுவர்.[3]

‘தந்திவர்மனது 16ஆம் ஆட்சி ஆண்டில் குவிலஞ் சாத்தன் என்னும் விடேல்விடுகு முத்தரையன் திருவாலத்தூர் மலையைக் கோவிலாகக் குடைந்து பெருமாளை எழுந்தருளச் செய்தான்’ என்பது மலையடிப்பட்டி வாகீசர் கோவிலின் அழிந்த மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.[4] தந்திவர்மன் காஞ்சிப் பரமேச்சுர விண்ணகரத்திற்குப் பொற்குடம் ஒன்றை அளித்துள்ளான்.[5]

இவன் காலத்து அரசர்

இவன் காலத்துக் கங்க அரசர் இரண்டாம் சிவமாறன் (கி.பி. 788-812) முதலாம் இராசமல்லன் (கி.பி. 817-853) என்போர் ஆவர்; இரட்ட அரசர் இரண்டாம் கோவிந்தன் (கி.பி. 722-780). துருவன்


  1. Ep. Indica, Vol.VIII.p.291 & P.T.S. Iyengar’s “pallavas part III, p.46.
  2. S.I.I. Vol. II, p.515.
  3. M. Ragava Iyangar’s “Alwargal Kala Nilai’, pp. 109-112.
  4. “Chronological list of Inscriptions of the Pudukkotta State p.2.
  5. S.I.I. Vol. VI, No.34.