(கி.பி. 780-794), மூன்றாம் கோவிந்தன் (கி.பி.794-814) என்பவர்; பாண்டிய மன்னர் நெடுஞ்சடையன் பராந்தகன் (கி.பி.765-790), இரண்டாம் இராசசிம்மன் (கி.பி.790-800), வரகுணமகாராசன் (கி.பி. 800-830) என்பவர்.
மரபு
இவன் தந்திவர்மன் மகன். தந்திவர்மன் கதம்ப அரசர் மகளை மணந்த செய்தியே சிறப்பாகப்பட்டயத்திற் கூறியுள்ளதால், மூன்றாம் நந்திவர்மன் அவ்வரசிக்குப் பிறந்தவனாதல் வேண்டும் என்று கொள்ளலாம். இதனை வேலூர் பாளையப் பட்டயமும் உறுதிப்படுத்துகிறது.
பட்டயங்கள்
(1) இவன் காலத்துப் பட்டயங்களில் சிறந்தது வேலூர் பாளையப் பட்டயமே ஆகும். இது பொன்னேரிக் கூற்றத்துத் திருக்காட்டுப் பள்ளியில் உள்ள சிவன் கோவிலுக்கு ஒரு சிற்றூரைத் தேவதானமாக விடுத்ததைக் கூறுவது. இப் பட்டயத்தில் பல்லவ அரசர் பட்டியல் முதலிய பல செய்திகள் குறிக்கப்பட்டுள்ளன. இது நந்திவர்மன் பட்டம் பெற்ற 6ஆம் ஆண்டில் விடப்பட்டதாகும். (2) இவனது பத்தாம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்ட கல்வெட்டு இவனது தெள்ளாற்று வெற்றியைக் குறிக்கிறது. அக் கல்வெட்டு திருநெய்த்தானம் (தில்லை ஸ்தானம்) கோவிலில் உள்ளது. (3) இவனது 12ஆம் ஆட்சி ஆண்டில் செந்தலைக் கல்வெட்டொன்று வெளியிடப் பட்டது. (4) இவனது 17ஆம் ஆட்சி ஆண்டில் திருவல்லம் கோவிலில் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டது. அதில், மூன்று சிற்றூர்களைச் சேர்த்து ‘விடேல் விடுகு-விக்கிரமாதித்த சதுர்வேதிமங்கலம்’ என்னும் பெயரில் தீக்காலிவல்லம் சிவபெருமானுக்குக் கொடுத்ததாகக் கண்டுள்ளது. (5)