பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

பல்லவர் வரலாறு



என்பதை நன்குணரலாம். இவன் காலத்தில் தமிழ்ப் பெருவணிகன் ஒருவன் சென்று சையாமில் ஒரு குளம் தொட்டான். அதற்கு ‘அவனி நாரணன் குளம் எனப் பெயரிட்டான்’ என்று அங்குள்ள கல்வெட்டொன்று கூறுகிறது. இதனால், இவனது காலத்தில் கடல்வாணிபம் சிறந்தமுறையில் நடந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவு. இவன் சிறந்த கடற்படை வைத்திருந்ததாக நந்திக் கலம்பகமும் கூறுகின்றது.

இவன் கழற்சிங்கனா?

இவன் நந்திக் கலம்பகத்தில் (செ. 13, 28) ‘கழல் நந்தி’ எனப்படுகிறான்: செ.59இல் ‘பல்லவர்கோள் அரி என்று கூறப்படுகிறான். ‘அரி-சிங்கம்’ என்பதை நாம் அறிவோம். எனவே மூன்றாம் நந்திவர்மன் கழல்சிங்கன்றான் என்பதில் ஐயமின்மை உணர்க. ஆயின்.

“கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற் சிங்கன் அடியார்க்கும் அடியேன்”

என்று சுந்தரர் தொகையிற் சுட்டப்பட்டவன் இவனா? எனின். ஆம் மேற்சொன்ன சையாம் செய்தியை நேர்க்க. இவன் காலத்தில் கடல்கடந்த நாடுகளில் இவன் பெற்றிருந்த செல்வாக்கையும் கடல்வாணிகத்தையம் நன்குணரலாம் அன்றோ? இன்னபிற சான்றுகளால்.இம்மூன்றாம்நந்திவர்மனே பெரியபுராண நாயன்மாருள் ஒருவனான கழற்சிங்கன் என்பது நன்கு விளங்குகிறது.[1] விளங்குமேல். இவனது உண்மைவரலாறு அறியகல்வெட்டுகளோடு நந்திக் கலம்பகம் சுந்தரர் தேவாரம், பெரியபுராணம் முதலியனவும் பெருந்துணைபுரியலாம் அல்லவா?

பல்லவர் - இரட்டர் போர்

பல்லவநாட்டை இருமுறை வென்ற மூன்றாம் கோவிந்தன் கி.பி. 814இல் இறந்தான். அவன்மகனான முதலாம் அமோகவர்ஷன் கி.பி.


  1. Dr. C. Minakshi’s Ad. and S. “Lise under the Pallavas’ p300.