பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/220

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
200
பல்லவர் வரலாறு


கூறிப் பாராட்டினார். இப் பேரரசன் கல்வி கேள்விகளில் வல்லவன்; ‘நந்தி நூல் வரம்பு முழுதும் கண்டான் (செ.3). ‘நூற்கடற் புலவன்’ (26) என்று கலம்பகம் கூறுதல் காண்க. இவன் சிறந்த வள்ளல் என்பது, ‘நந்தி, வறியோர் சொன்ன பொருள் நல்குவன்’ (24) ‘ஒழியா வண்கைத் தண்ணருள் நந்தி’ (43) முதலிய தொடர்களால் அறியலாம்.

ஏனைப் பல்லவ அரசர் போலன்றி. இவன் தமிழிற் பெரும் புலவனாக இருந்தான் என்பது ‘பைந்தமிழை ஆய்கின்ற கோன் நந்தி'[1] ‘....தமிழ்நந்தி'[2] என வரும் தொடர்களால் அறியலாம்.

நந்திக்கலம்பகம் கூறிய மேற்சொல்லப்பட்ட எல்லா நல்லியல்புகளும் நந்திவர்மனது வேலூர் பாளையப் பட்டயத்தில் காணலாம். ‘நந்திவர்மன் ஆட்சியில் (1) வசந்த காலம் சிறப்பளித்ததுபோல முன்னர்ச் சிறப்பளித்ததில்லை; (2) நல்லியல்புகள் பொருந்திய பல் பெருமக்கள் பிறந்திருந்தனர்; (3) பெண்மக்கள் சிறந்த கற்புடையவராக இருந்தனர். (4) வள்ளல்கள் பலர் இருந்தனர். (5) சான்றோர் அடக்கமாக இருந்தனர். (6) குடிகள் அரசனைச்சார்ந்து நின்றனர்.”

மனைவியர்

இப் பேரரசனுக்கு இருந்த மனைவியருள் இருவரே. பட்டயங்களிற் குறிக்கப்பட்டுளர்; நந்திவர்மனிடம் தோற்ற இராட்டிரகூட அரசனான அமோகவர்ஷ நிருபதுங்கள் மகளான சங்கள் ஒருத்தி. ‘இவள், இலக்குமியின் அவதாரம்’ என்னலாம்; ஈன்ற தாயைப்போலக் குடிகளைப் பாதுகாத்தான். அரசனது நற்பேறே இவளாகப் பிறப்பெடுத்து வந்தது போலும்! இவள் சிறந்த நுட்ப அறிவுடையவள்; எல்லாக் கலைகளிலும் வல்லவன்,[3] என்று பாகூர்ப் பட்டயம் பகர்கின்றது.[4] மற்றொரு ഥனைவி அடிகள் கத்தன் மாறம்


  1. நந்திக் கலம்பகம் செ25.
  2. Ibid, p.26,
  3. SII. Vol. II Part v. p.509.
  4. Ep, Indica, Vol. XVIII, p. 13.