பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/227

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
207
சமணசமயப் புகழ்பாக்கள்


ஆதித்த சோழன் செங்கற்பட்டு வரையுள்ள தொண்டைநாட்டைக் கவர்ந்துகொண்டான். இங்ஙனம் தொண்டைநாடு சோழர்ஆட்சிக்குத் சென்ற ஆண்டு ஏறத்தாழக் கி.பி. 890 என்பர் ஆராய்ச்சியாளர்.[1]

எனவே, அபராசிதவர்மன் ஆட்சி கி.பி. 890 உடன் முடிந்ததால் வேண்டும். ஆனால் அவனது 18 ஆம் ஆண்டுக் கல்வெட்டுக் கிடைக்கின்றன. அவற்றைக்கொண்டு நோக்கின், அவன் கி.பி 872 முதல் கி.பி 890 வரை ஆண்டிருத்தல் வேண்டுமென்று கூறவேண்டிவரும். ஆயின் கி.பி.882 வரை நிருபதுங்கன் அரசனாக இருந்தமைக்குச் சான்று இருத்தலால் இந்த முடிவு கொள்ளல் தவறு. ஆதலின், அபராசிதன் தந்தையின் முதுமைப் பருவத்தில் தானே நாட்டை ஆண்டு வந்தான் எனக்கோடலே பொருந்துவதாகும். மேலும், அபராசிதன் காலத்துக் கல்வெட்டுகள் அனைத்தும் செங்கற்பட்டு, சித்துர் ஆகிய இரண்டு கோட்டங்களிற்றாம் காணப்படுகின்றன. ஆதலின், நிருபதுங்கர்வமனது ஆட்சி முடிவிலேயே பல்லவப் பேரரசின் பெரும் பகுதி சோழர் கைப்பட்டதென்னலாம்; அபராசிதன் ஆட்சியோடு பல்லவர் பேரரசு முடிவுற்றது என்னலாம்.[2]

பழிக்குப் பழி

ஏறக்குறைய கி.பி. 250இல், சோழரைத் துரத்திப் பல்லவர் தொண்டைநாட்டையும் பிறகு சோழ நாட்டையும் கைப்பற்றிக்கி.பி. 890 வரை, அஃதாவது ஏறத்தாழ 650 வருட காலம் தமிழ் நாட்டை ஆண்டனர். அதன் பிறகு அச் சோழ மரபினரே பல்லவரைப் பழி தீர்த்துக் கொண்டனர் என்பது வரலாறு கூறும் உண்மை ஆயிற்று. என்னே உலகப் பேரரசுகளின் தோற்றமும் மறைவும்!

கோவில் திருப்பணிகள்

நிருபதுங்ன் காலத்தில் பல கோவில்களில் புதிய கல்வெட்டுகள் தோன்றின. பல திருப்பணிகள் செய்யப்பட்டன. காடவன்


  1. K.A.N. Sastry’s “Cholar,’ Vol. I. pp.133-136.
  2. Dr. C. Minakshi’s “Ad. and S. Life under the Pallavas’ p.5.