பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/230

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
210
பல்லவர் வரலாறு


திருத்தணிகைக் கோவில்

இஃது அபராசிதவர்மன் காலத்தில் ஏறத்தாழக் கி.பி. 890இல் கட்டப்பட்டது. இதில் இவனது 18ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுகள் கிடைத்தமையால் இக் கணக்குத் தரப்பட்டது. இக் கோவில் இராசசிம்மன் கோவிலுக்கும் பிற்காலச் சோழர் கோவிலுக்கும் இடைப்பட்ட வளர்ச்சி உடையது. இதில் கோபுரம் இல்லை. கும்பம் வேறு. கோபுரம் வேறு என்பது இல்லை. கும்பத்துக்குள் உள்ளறையும் முன் மண்டபமுமே உண்டு. கும்பத் தோற்றம் யானையின் பாதியாக இருக்கும். இத்தகைய கும்பம் மாமல்லபுரத்தில் உள்ள சகாதேவன் தேரிலும் கூரம் கோவிலிலும்[1] காணலாம். தூண்கள்மீதுள்ள போதிகை உருண்டது. இந்த அடையாளம் நினைவிற்கொள்ளின், பிற்காலப் பல்லவர் கோவில்கள் இவை எனக் கூறிவிடலாம். பிற்காலச்சோழர்போதிகை கோணங்கள் உள்ளதாக இருக்கும். இந்தத் திருத்தணிகைக் கோவிற் சுவர்களில் உள்ள நான்கு புரைகளில் தென்முகக் கடவுள், பிரமன், கொற்றவை (துர்க்கை). திருமால் இவர்தம் சிலைகள் இருக்கின்றன. இவ்வழகிய கோவிலைக் கட்டியவன் நம்பி அப்பி என்பவன்.[2] இந்தக் கோவிற் கல்வெட்டிற் காணப்படும். வெண்பா ஒன்று அபராசிதவர்மன் பாடியதாகக் கூறப்படுகிறது.[3]

அபராசிதன் காலத்துத் திருப்பணிகள்

இவன் காலத்திலும் பல திருப்பணிகள் நடைபெற்றன: கச்சிப்பேட்டைச் சேர்ந்த மாங்காட்டு ஈசர்க்கு விளக்கெரிக்கப் பொன் தரப்பட்டது.[4] ‘பெருநங்கை’ மகனான வாண கோவரையர்


  1. சென்னைக்கடுத்த கோவூரிலும் காணலாம்.
  2. P.T.S. Iyengar’s “Pallavas,’ part III, p.77; 435 of 1005 343.
  3. inscription No.433 of 1905. இவன் ‘வெண்பாப் பாடினான் என்பதை நோக்க, இவனுக்கு முற்பட்ட ஐயடிகன் காடவர்கோன் நாயனார் என்பவர் ஒருவர் க்ஷேத்திர வெண்பா என்னும் சிறுநூல் பாடினார் என்பது இங்கு நினைக்கத்தக்கது.
  4. 351 of 1908