பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமணசமயப் புகழ்பாக்கள்

215



நன்கறியலாம். மூன்றாம் சிம்மவர்மன்[1] சிம்ம விஷ்ணு முதலிய பல்லவ அரசர் அனைவரும் வடமொழிப் புலவராக இருந்தவர்; மூன்றாம் நந்திவர்மன் மூன்றாம் சிம்மவர்மன். அபராசிதவர்மன் என்பவர் சிறந்த தமிழ்ப் புலவராக இருந்தவர். இராசசிம்மன் சைவ சித்தாந்தத்திற் சிறந்தவன்.[2] பல்லவ அரசமாதேவியாரும் நிரம்பப் படித்தவர்கள், ஒழுக்கம் மிக்கவர்கள் என்பது சாருதேவி, ரங்கபதாகை, தர்ம மகாதேவி, சங்கா, மாறம்பாவையார், பிருதிவீ மாணிக்கம் முதலிய பெண்மணிகள் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகளால் நன்கறியலாம்.

பல்லவர் இலச்சினை

பாண்டியர்க்கு மீனும், சோழர்க்குப் புலியும், சேரர்க்கு வில்லும், கங்கர்க்கு நாகமும், சாளுக்கியர்க்குப் பன்றியும் இலச்சினை ஆனாற்போலப் பல்லவர்க்கும் நந்தி இலச்சினை ஆயிற்று. நந்தி இலச்சினை பொதுவாகப் பல்லவர் சைவ சமய உணர்ச்சி உடையவர் என்பதை நன்கு விளக்குகிறது. இரண்டு பக்கங்களிலும் உயர்ந்த விளக்குகள், இடையே நந்தி அமர்ந்துள்ள அழகிய கோலம் கொண்ட பல்லவர் இலச்சினை பார்க்கத்தக்கது. உருவப்பள்ளி, பிகாரப் பட்டயங்களில் சிங்க இலச்சினை காணப்படுகிறது. சிங்க இலச்சினை கொண்ட பட்டயங்கள் யாவும் போர் முகத்திலிருந்து விடப்பட்டவை ஆகும். வெற்றியைக் குறிக்கச் சிங்க இலச்சினையை விடச் சிறந்த இலச்சினை கிடைத்தல் அரிய தன்றோ? பிற்காலப் பல்லவர் அனைவருமே நந்தி இலச்சினையே நன்கு பயன்படுத்தினர். பல்லவர் கொடி நந்திக்கொடி ஆகும். பல்லவர் காசுகளிலும் நந்தி இருத்தலைக் காணலாம்.[3] பல்லவ அரசர் வைணவராக இருந்த காலத்திலும் சமணராக இருந்த காலத்திலும் இந்த நந்திக் கொடியும் நந்தி இலச்சனையும நந்திப் பதிவு கொண்ட நாணயங்களும் வழக்கில்


  1. இவன் பெரியபுராணம் கூறும் ஐயடிகள் காடவர்கோன் நாயனார் என்று ஆராய்ச்சியர் கருதுகின்றனர். Vide Mysore Archaeological Annual Report 1925, pp-9.11
  2. S.I.I. Kailasanathar Temple Ins.
  3. Walater Elliet’s “Coins of South India’ Nos. 31 to 38; 65, 57.