பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமணசமயப் புகழ்பாக்கள்

223



ஊர் அவைப் பிரிவுகள்

ஊர் அவைக்குள் பல பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவும் வாரியம் (Committee) எனப்பட்டது. ‘ஏரி வாரியப் பெருமக்கள்’ ‘தோட்ட வாரியப் பெருமக்கள்’ எனப் பல வகுப்புப் பெருமக்கள் கொண்ட முழு அவையே ஊரவை ஆகும். சிற்றுர்களை நேரே பொறுப்பாக அரசியலுக்குட்பட்டு ஆண்டவர் ஆளுங்கணத்தார் எனப்பட்டார். இவர் ஊரவையாரின் வேறானவர். இக்கால நகர அவையாரைப் போன்றவர் அக்கால ஊரவையார்; இக்காலக் கமிஷனர் முதலிய அரசியல் அலுவலாளர் அக்கால ஆளும் கணத்தார் ஆவர். கோவில் தொடர்புற்ற பலவகை வேலைகளையும் தவறாது கவனித்துக் கோவில் ஆட்சி புரிந்து வந்த கூட்டத்தார் அமிர்த சணத்தார்[1] எனப்பட்டார். “திருவொற்றியூர்ப்புறத்து ஆதம்பாக்கத்துச் சபையோமும் அமிர்த கணத்தோமும் இப்பொன்னால் யாண்டுவரை கழஞ்சின் வாய் மூன்று மஞ்சாடி...” எனவரும் கல்வெட்டுத் தொடரைக் காண்க. இவர்கள் கோவிலுக்கு வரும் தானங்களைப் பெறுவர்; கோவில் பண்டாரத்திலிருந்து பொருள்களைக் குறித்த வட்டிக்குக் கடன் தருவர். இவை தொடர்பான பாத்திரங்களைப் பாதுகாப்பர். கோவில் தொடர்புற்ற பிற வேலைகள் எல்லாவற்றையும் கவனிப்பர். இவர்கள் ஊர் அவையாருக்குக் கோவில் சம்பந்தமான செய்திகளில் பொறுப்புள்ளவர் ஆவர்.[2]

இராட்டிர ஆட்சி

இராட்டிரங்களாகிய மண்டலங்களை ஆண்டவர் பெரிதளவு தம்மாட்சியே செலுத்திவந்தனர். இவர் நாளடைவில் வழிவழியாக


  1. இந்த அமிர்த கணத்தார் ஆட்சி இருந்தனமயாற்றான் அப்பர் சமபந்த்ர், சுந்தரர் காலங்களில் கோவில்கள் உயர்நிலையில் இருந்தன. நாயன்மார்க்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. அக்காலத்தில் கோவில்களில் ஆடல் - பாடல்கள், விழாக்கள் முதலியன குறைவின்றி நடைபெற்றன. சைவ சமயம் இசை, நடனம், சிற்பம், ஒவியம் முதலியன கொண்டு செவ்வனே வளர்ந்தது. இங்ஙனமே வைணவமும் நன்கு வளர்ந்தது.
  2. R.Gopalan’s “Pallavas of Kanchi’ pp.156-157.