பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/244

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
224
பல்லவர் வரலாறு


இப் பதவிகளில் நிலைத்துவிட்டனர். பல்லவர் வடவர் ஆதலாலும், அவரது பேரரசு வடக்கில் சாளுக்கியர் இரட்டர்களாளும், தெற்கில் பாண்டியராலும் அடிக்கடி துன்புற்றதாலும் பல்லவர் தமிழ்க் குறுநில மன்னர்களை மிகுதிப்படுத்த வேண்டியவர் ஆயினர். தமிழ் மக்கட்கு ஆளும் பொறுப்புத்தர வேண்டியவர் ஆயினர்.[1] இதனை நன்கு நினைந்தே சோழ அரசைப் பெயரளவில் தனியரசாக விட்டு வைத்தனர் போலும்!

சிற்றரர்கள்

இக் காலச் சிற்றுர்களே பெரும்பாலும் மாறுதல் இன்றி அக்காலத்திலும் இருந்தன. மக்கள் குடி இருப்புக்குரிய வீடுகள், நன்செய்-புன்செய் நிலங்கள், வீட்டுத் தோட்டங்கள், குளங்கள், புறம்போக்கு நிலங்கள், சிற்றுர்ப் பொது நிலங்கள். கடை வீதிகள், சுடுகாடு-இடுகாடுகள். கோவில்கள், கோவில் நிலங்கள் முதலியன இருந்தன. ஒவ்வொரு சிற்றுாரும் நன்கு அளக்கப்பட்டு எல்லைகள் குறிக்கப்பட்டிருந்தது. சிறிய சிற்றுார்கள் பல பெரிய சிற்றுார்கள் சில: இவை பல்வேறு குடி இருப்புகளையும் சேரிகளையும் கொண்டவை. பிராமணர் பெரும் பகுதியினராக வாழ்ந்த சிற்றுரர்களிலும் பல திறந்து மக்கள் குடியிருந்தனர். பலவகைத் தொழிலாளிகளும் வணிகரும் வாழ்ந்து வந்தனர். இக்கால வழக்கப்படியே கிணறுகள், குளங்கள். கோவில்கள், ஓடைகள் முதலியன சிற்றுர்களுக்குப் பொதுவாக இருந்தன. நெல் அடிக்கும் களத்துக்கு வரியாக நிலமுடையார் குறிப்பிட்ட அளவு நெல்லைச் சிற்றுர்க் களஞ்சியத்துக்குச் செலுத்தி வந்தனர். இத்தகைய பணிகளை ஊர் அவையார் கவனித்து வந்தனர்.

பிரம்மதேயச் சிற்றரர்கள்

இவை மறையவர் பொருட்டே புதியனவாக உண்டாக்கப் பட்டவை. அவற்றுள் உதயசந்திர மங்கலம், தயாமுக மங்கலம், பட்டத்தாள் மங்கலம் முதலியன சிலவாகும். இச் சிற்றுார்கள்


  1. Srinivasachari’s History and the Institutions of the Pallavas’ p.23.