பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமணசமயப் புகழ்பாக்கள்

225



எத்தகைய வரியும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டியதில்லை. அதனால் இவை நன்னிலையில் வளர்ச்சியுற்று வந்தன.

தேவதானச் சிற்றூர்கள்

சில சிற்றுர்கள் கோவில்களுக்கென்று விடப்பட்டன. அவை தேவதானச் சிற்றுார்கள் எனப் பெயர்பெற்றன. அவற்றுள் ஒன்று மூன்றாம் நந்திவர்மனால் யக்ளுேஸ்வரர்க்கு விடப்பட்ட திருக்காட்டுப்பள்ளி என்னும் (பொன்னேரிக்கு அடுத்த) சிற்றுர் ஆகும். அச் சிற்றுாரின் வருவாய் முழுதும் கோவிற் பணிகளுக்கே செலவிடப்பட்டது. பல்லவப் பேரரசர் இந் நாட்டில் பல இடங்களில் பல வகைக் கோவில்களைக் கட்டினார்கள்: பல கோவில்கட்கு நிலதானம் செய்தார்கள். இம்முறையால், பல்லவர் ஆட்சியில் கோவில், சிற்றுார்ப் பொதுவாழ்வில் பெரிய மாறுதலைச் செய்துவிட்டன என்று கூறலாம்.

சிற்றரர்க் கோவில்கள்

கோவிலால் பல ‘குடும்பங்கள்’ பிழைத்தன. ‘தனிப்பரிவாரம், கோவில் பரிவாரம் அமிர்தகணத்தார்’ என்பவர் அனைவரும் கோவில் வருவாயைக் கொண்டு பிழைத்தவர் ஆவர். கோவில்களை அடுத்து அடியார்கட்கும் ஏழைகட்கும் உணவுச் சாலைகள் நடைபெற்று வந்தன.[1] கோவில் அல்லது உணவுச் சாலைக்கு ஊராரிடமிருந்தும் வணிகரிடமிருந்தும் இக் கால வழக்கம் போல ‘மகன்மை’ (மகமை அல்லது மகிமை) யாக ஒரு பகுதி நெல், அரிசி முதலியவற்றைப் பல்லவர் காலத்தில் வசூலித்து வந்தனர் என்பது தெரிகிறது. இச் செய்தியைப் பெருமான் அடிகள் என்று போற்றப்பட்ட இரண்டாம் நந்திவர்மன் காலத்துக் கல்வெட்டு தெளிவாக அறிவிக்கின்றது.[2] இத்தகைய சத்திரங்கள் அல்லது மடங்கள் பல இந்த நாட்டில் இருந்தன. அவற்றில் காபாலிகர் காளாமுகர் முதலிய பலவகைச் சைவர் உண்டு வந்தனர். விழாக்காலங்களில் உள் ஊரார் வெளி ஊரார்


  1. S.I.I Vol II P.509.
  2. M.E.R. 17 of 1899.