பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/246

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
226
பல்லவர் வரலாறு


என்னும் அனைவர்க்கும் உண்டி வழங்க வசதிகள் அளிக்கப்பட்டி ருந்தன. அப் பணிக்கு அரசனும் பிறரும் பொருள் உதவி செய்தனர். திருஆதிரை முதலிய நல்ல நாட்களில் கோவில் விழாக்கள் சிறப்புற நடந்தன. அவற்றுள் சித்திரைவிசுத்திருவிழா ஒன்று. இது நடைபெற ஒரு தனிமகன் 15), கழஞ்சுபொன் திருத்தவத்துறை (லால்குடி) கோவிலுக்குச் கொடுத்தான் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது. இங்ஙனம் சிற்றுர்க் கோவில்கள் சிற்றுாரார்க்குப் பக்தியை மட்டும் ஊட்டுவதோடு நில்லாது. ஊர்மக்கட்குக் கடன் கொடுத்துதவும் அறச்சாலையாகவும், அடியார்களை உண்பிக்கும் உணவு நிலையங்களாகவும் இருந்தன. இவற்றோடு, தேவைப்பட்ட காலங்களில் ஊரார்க்குப் பண உதவி செய்யும் கோவில் பண்டாரமாகவும், கோவில்கள் இருந்து வந்தன.[1]

பள்ளிச் சந்தம்

தேவதானம், பிரம்மதேயம் என்பன போலப் பள்ளிச் சந்தம் என்பது சமணப் பள்ளிக்கென விடப்பட்ட இறையிலி நிலங்கள் ஆகும். ஆனால், இப் பள்ளிச் சந்தம் பிற்காலத்ததே ஆகும். ஆயின், இதுகாறும் கிடைத்துள்ள பல்லவர் பட்டயங்களில் பெளத்தர்க்கு நிலம் விட்டதாக ஒரு சான்றும் காணக் கிடைக்கவில்லை என்பது குறிக்கத் தக்கது.[2]

ஏரிப்பட்டி

சிற்றுார்களில் உள்ள ஏரிகளை அடிக்கடி பழுது பார்க்க வேண்டிய செலவுக்காகச் சில நிலங்கள் ஊரவையார் பார்வையில் விடப்பட்டி ருந்தன. அவை ஏரிப்பட்டி எனப்படும். ஏரிப்பட்டியை மேற்பார்வை யிட்டடவர் ஏரிவாரியப் பெருமக்கள் எனப்பட்டனர்.[3] ஒரு


  1. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas’ p. 138.
  2. Dr.C.Minakshi’s “Administration and Social Life under Pallavas’ p. 145.
  3. EP. Indica Vol.XI, p.225.