பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/247

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
227
சமணசமயப் புகழ்பாக்கள்


குறிப்பிட்ட அளவையுடைய நிலத்து விளைவிலிருந்து குறிப்பிட்ட அளவுள்ள நெல்லை ஏரிவாரியாகத் தரும் பழக்கம் பல்லவர் காலத்திருந்தது.

நிலவகை

மிராசுதாரர் நிலங்களில் பெரும்பகுதி “பயல் நிலம்’ என்றும் அரசர்க்குரிய வரியைச் செலுத்த என்று விடப்பட்ட நிலப்பகுதி ‘அடை நிலம்’ என்றும் குறிக்கப்பட்டன. பயல் நில வருவாயில் பாதியை நிலத்தவர் பெற்றனர்; மற்றப் பகுதி பயிரிட்டவர் பெற்றனர். அரசாங்க நிலங்களைப் பயிரிட்ட குடியானவர் சிலர் இருந்தனர். அவர்களது ‘பயிரிடும் உரிமை’ அரசாங்கத்தாரால் தரப்பட்டு வந்தது. அந்த உரிமை அடிக்கடி மாற்றப்பட்டு வந்தது.[1]


பலவகை வரிகள்

தென்னை - பனை முதலியன

தென்னை மரங்கள் சிறப்பாகப் பிரம்மதேய தேவதானச் சிற்றுார்களில் அரசர் உரிமை பெற்று வரி செலுத்தாது பயிரிடப்பட்டன. இதனால் பிற ஊர்களில் அவற்றைப் பயிரிட விரும்பினோர் அவற்றின் விளைவில் ஒரு பகுதியை அரசர்க்கு வரியாகச் செலுத்தி வந்தனர் என்பது பெறப்படுகிறது. முன்சொன்ன பிரம்மதேய - தேவதானச் சிற்றுர்களில் இருந்த தென்னை - பனை மரங்களிலிருந்து கள் இறக்குதல் விலக்கப்பட்டிருந்தது. கள் இறக்கினவர் அரசாங்க வரி செலுத்தி வந்தனர்; இம் மரங்களைப் பயிரிட்டவர் அரசாங்கத்திற்கு ஒரு பகுதி வருவாயை வரியாகச் செலுத்தி வந்தனர்; வெட்டப்பட்ட மரங்களின் அடிப் பகுதியில் ஒரு பகுதியும் அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டது. தென்னை பனை மரங்கட்கு உரியவர், சாறு இறக்க வரி கட்டினர். பனம்பாகு செய்ய வரி


  1. S.I.I. Vol.II .P.351.