பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5
பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம்


அரசரைக்கொண்டு காவிரிக்குக் கரை இடுவித்தவன்,'[1] என்று பட்டயத்திற் கூறி மகிழ்வராயின், கரிகாலன் போர் வன்மையை என்னென்பது கரிகாலன் இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், வழியில் இருந்த அரசரிடம் பரிசு பெற்று மீண்டவன்,’ என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது.

எனவே, இதுகாறும் கூறிய செய்திகளால், கரிகாற் சோழன் காலத்திற்குள் தொண்டைமண்டலம் சோழர்ஆட்சிக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும் என்று கொள்ளுத்ல் தவறாகாது. கரிகாலன் காலம் முதல் பல்லவர் கைப்பற்றும் வரை தொண்டைமண்டலம் சோழர் ஆட்சியிற்றான் இருந்த தென்பதை இதுகாறும் எந்த ஆராய்ச்சியாளரும் மறுத்திலர். ஆதலின், கரிகாலன் காலத்தைக் கண்டறிவோமாயின், அக்காலமுதல் எத்துணை நூற்றாண்டுகள் தொண்டை மண்டலம் சோழர் ஆட்சியில் இருந்தது, என்னென்ன நலன்களைப் பெற்றது என்பன அறிய இடமுண்டாகும்.

வடநாடு சென்ற தமிழர் பலராவர். அவருள் ஒருவன் கரிகாலன்; ஒருவன் செங்குட்டுவன். இவ்விருவர் காலங்களும் கடைச் சங்கத்தையும், தொண்டைமண்டலத்தையும் பொதுவாககத் தமிழக நிலையையும் பல்லவர்க்கு முற்பட்ட இந்திய நாட்டு வரலாற்று நிலையையும் அறியப் பேருதவி புரிவன ஆதலின், முதற்கண் செங்குட்டுவன் காலத்தைக் கண்டறிய முயல்வோம்.

செங்குட்டுவன்காலம்

கரிகாலன் காலத்தை ஆராயப் புகுந்த திரு. ஆராவமுதன் என்பார் தமது நூலில், “தமிழ் வேந்தர் வடநாடு நோக்கிப் படையெடுத்த காலம் (1) அசோகனுக்குப் பிறபட்ட மோரியர் (கி.மு.232 - கி.மு. 184) காலமாகவோ, (2) புஷ்யமித்ர சுங்காவுக்குப் பிற்பட்ட (கி.மு. 148 - கி.மு. 27) காலமாகவோ, (3) ஆந்திரர் ஆட்சி குன்றிய கி.பி. 3ஆம் நூற்றாண்டின் தொடக்கமாகவோ இருத்தல் வேண்டும்” என முடிவு கூறினார்.


  1. bid.p.44