பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/253

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
233
சிறப்புப் பெயரகராதி


‘கூற்றன் வாய்” வாய்த்தலை, தலைவாய், முகவாய் எனப் பலவாறு பெயர் பெற்றன.

ஏரி வாரியம்

இதுகாறும் கூறிவந்த ஏரி, கிணறு வாய்க்கால், மதகு இவற்றை மேற்பார்வையிட்டு வேண்டிய திருத்தங்களை ஏரிவாரியப் பெருமக்கள் செய்து வந்தனர். பெரிய ஏரிகளில் சீர் திருத்தம் நடைபெறும்போது, ஏரிக் கரைகளைப் பண்படுத்தத் தோணிகள் பயன்படுத்தப்பட்டன. இத்திருத்தங்களைச்செய்ய ஊரவையாரிடம் பணம்படைத்த பெருமக்கள் அடிக்கடி பொன் முதலியவற்றை ஒப்புவித்தல் மரபு. அவர்கள் அத்தொகையை வட்டிக்கு விட்டுப் பெருக்கி அதனை நல்வழியிற் பயன்படுத்தி வந்தனர். நீர்ப்பாசன வசதிகளை ஊராரும் ஊன்றிக் கவனித்துவந்தனர். பலர் நிலங்களைத் தானம்செய்து, அவற்றின் வருவாயைக் கொண்டு நீர்ப்பாசன வசதிகளைத் திருத்தமுறச் செய்து வந்தனர். ஊர் வருமானத்தில் ஒரு பகுதியும் இப் பணிகட்குப் பயன்பட்டுவந்தது. போதாத இடங்களில் அரசாங்கமும் பொருள் உதவி செய்து வந்தது. இத்தகைய வியத்தகு முறைகளால் நீர்ப்பாசனம் குறைவின்றிப் பல்லவர் காலத்தில் நடைபெற்று வந்தது.[1]

நீட்டல் அளவை

‘கலப்பை, நிவர்த்தனம், பட்டிகா, பாடகம்’ என்னும் நான்கு அளவைகள் பல்லவர் ஆட்சியில் இருந்தன. (1) கலப்பை- இரண்டு எருதுகள் பூட்டப்பெற்ற ஒரு கலப்பையைக் கொண்டு குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒருவன் உழும் நிலத்தின் அளவு கலப்பை எனப்பட்டது. (2) நிவர்த்தனம் ஒருவன் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியிலிருந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் நடந்து புறப்பட்ட இடத்தை அடைந்தவுடன் அவனால் எல்லை கோலப்பட்டநில அளவே ‘நிவர்த்தனம்’[2] எனப்பட்டது. பிற்காலத்தில் 200 சதுரமுழம்


  1. K.V.S. Iyer’s “Ancient Dekkhan,’ pp.368-370 392.
  2. கங்க நாட்டிலும் இப்பெயர்கள் உண்டு.