பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பெயரகராதி

235



நிறுத்தல் அளவை

கழஞ்சு, மஞ்சாடி என்பன பொன் முதலியன நிறுக்கும் அளவைகள், கழஞ்சி’ என்பது பல பட்டயங்களில் காணப்படும் அரசாங்க அளவை (Standard Weight) ஆகும். கழஞ்சின் பன்னிரண்டில் ஒரு பாகம் ‘மஞ்சாடி’ ஆகும். அதனாற்றான் பட்டயங்களில், கழஞ்சிற்கு வட்டி குறிப்பிட்டபோதெல்லாம் ‘மஞ்சாடி’ அளவை குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்லவர் காசுகள்

பல்லவர் காசுகள் செம்பாலும் வெள்ளியாலும் பொன்னாலும் செய்யப்பட்டவை. அவற்றின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டி லிருந்து கூறலாம். அவை பிற்காலப் பல்லவருடையன என்னலாம். பெரும்பாலான காசுகள் நந்தி இலச்சினை பெற்றவை. சில, இரண்டு பாய்மரக்கப்பல் இலச்சினை கொண்டவை. முன்னது பல்லவரது சைவ சமயப் பற்றையும் பின்னது கடல் வாணிபத்தையும் குறிப்பவை; காசின் மறுபுறம் சுவஸ்திகா, வேள்விக்குரிய விளக்கு, சங்கு, சக்கரம், வில், மீன், குடை, சைத்தியம் (கோவில்), குதிரை. சிங்கம் முதலியன காசுதோறும் வேறுபட்டுள்ளன. -

(1) எல்லாக்காசுகளும் சிறந்த வேலைப்பாட்டுமுறை பெற்றவை. டாக்டர் மீனாட்சி என்னும் ஆராய்ச்சித்திறன் பெற்ற அம்மையார்,தாம் சென்னைப் பொருட்காட்சிச்சாலை களிற் சோதித்த காசுகளில் பொற்காசுகளாக இருந்த ஆறும், முதலாம் மகேந்திரன் காலத்தவையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.[1] அக்காசுகளின் மீது கதாசித்ரா என்னும் சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை ‘கடாக-(கடாவ)- சித்ர (காரப்புலி)’ என்பவற்றைக் குறிப்பனவாகக் கொண்டு அம்மையார், அவை ‘காடவனாகிய எத்திரகாரப்புலி (மகேந்திர வர்மன்) என்பவன் காலத்தவை’ என்று கூறுதல் பொருத்தமாகவே காணப்படுகிறது. பல்லவர் வரலாற்றில் பண்பட்ட ஆராய்ச்சி உடைய அவ்வம்மையார் கூற்றுக்கோடற்பால்தேயாம்.


  1. Vide her “administration and Social Life under the Pallavas’, P89.