பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

247



இவ்வேலைத்திறனை இன்றளவும் நாம் உணருமாறு செய்த அப்பெருமக்கள் கலை அறிவு வியக்கத்தக்கதன்றோ? அவர்கள் எங்ஙனம் எங்கு - இக்கலை அறிவைப் பெற்றனர்’ பல்லவர் பெருநாட்டிலே அன்றோ காவியம் படித்துணர்வது ஓவியமும் சிற்பமும் பார்த்து உணர்பவை, இவை காவியத்தையே கண்முன் காட்டுபவை அல்லவா? எனவே, இவற்றில் வல்ல பெருமக்கள் முதலிற் காவிய உணர்ச்சிஉடையராதல் வேண்டும்.அத்துடன்சிறந்த ஒழுக்கமும்பத்தி முதிர்ந்த உள்ளமும் உடையவராதல் வேண்டும் மாசற்ற அகத்தூய்மை உடையவர் தாம் இவற்றைச் செய்து முடித்தல் கூடும். ஆதலின், அந்நிலையைப் பெற அப்பெருமக்கள் இசை நாடகம், நடனம், சமயம், இலக்கியம், உலகியல் இவற்றில் திப்பிய புலமை சான்றவராக இருந்தனர் என்பதில் ஐயமில்லை. ஆகவே, அவர்கள் அரசாங்கத்தாலும் பொதுமக்களாலும் உயர்வாக மதிக்கப் பெற்று வந்தவராவர். இந்நிலைக்கு உரிய கல்வி எத்தகையதாக வளர்ச்சியுற்றிருத்தல் வேண்டும் பல்லவப் பெருநாட்டில் சிறந்த கலைக்கூடங்கள் இராவிடில், இக்கலைகள் ஒருபோதும் வளர்ச்சிற்று இரா.

காஞ்சிக் கல்லுரரி

கதம்ப அரசர் மரபைத் தோற்றுவித்த மயூரசன்மன் முதற்பல்லவர் காலத்தில் காஞ்சியில் இருந்தவடமொழிக்கல்லூரியில் (கடிகையில்) படிக்க வந்தான். அவன் காலம் கி.பி. 345-370 என ஆராய்ச்சியாளர் அறைகின்றனர்;[1] எனவே, காஞ்சி வடமொழிக் கல்லூரி அக்காலத்திலேயே சிறப்புற்று இருந்ததென்பதை அறியலாம்.

எத்தகைய கல்வி?

அக்கல்லூரியில் எவ்வகைக் கல்வி அளிக்கப்பட்டது? ‘மயூரசன்மன் வேதங்களை நன்றாகப் படித்தவன். அவன் தன் ஆசிரியருடன் காஞ்சி வடமொழிக் கல்லூரிக்கு மேலும் படிக்கச் சென்றான்’ என்னும் தாளகுண்டாப் பட்டயத்தை நோக்கக் காஞ்சி -வடமொழிக் கல்லூரி வேதங்களைப் படித்தவர்க்கு அளிக்கும்


  1. “Moreas’s “The Kadamba Kula,’ p. 14.