பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/269

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
249
மூன்று ஐயங்கள்


பாகூர் வடமொழிக் கல்லூரி

பாகூர் என்பது தென்னார்க்காட்டுக் கோட்டத்தில் திருப்பாதிரிப்புலியூருக்கும் புதுச்சேரிக்கும் இடையில் உள்ள பெரும்பாதையில் அமைந்துள்ள சிற்றுாராகும். இது பல்லவர் காலத்திற் சிறந்திருந்த பெரும் பதியாகும். இங்கு ஒரு வடமொழிக் கல்லூரி இருந்தது. நிருபதுங்கவர்மன் காலத்துப் பட்டயத்தில் உள்ள செய்திகளைக் காண, அக்கல்லூரி அதற்கு முன்னரே உயரிய நிலையில் இருந்துவந்தது. என்பது தெரிகிறது. அக் கல்லூரியில் படித்தவர் அனைவரும் மறையவரேயாவர்; அதனைப் பார்வையிட்ட வரும் மறையவரே ஆவர். இங்கு 14 கலைகள் கற்பிக்கப்படுகின்றன; இக்கல்லூரி மறையவராற் பார்வையிடப்பெறுகின்றது; இச் சிற்றுரைச் சேர்ந்த அலுவல்களும் அவராலே கவனிக்கப்படு கின்றன; இங்குப்பதினான்கு கலைகளுடன் 18 வகை வித்தைகளும் கற்பிக்கப்படுகின்றன.[1] 18 வகை வித்தையாவன: நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், மீமாம்சை, நியாயம், தருமசாத்திரம், புராணம், மருத்துவம், வில்வித்தை, இசை, பொருள் நூல் என்பன.

முன்று சிற்றரர்கள்

இக் கல்லூரி செவ்வனே நடைபெற, ஏறத்தாழக் கி.பி. 860இல், நிருபதுங்கவர்மன் ஆட்சியில், பாகூரை அடுத்த மூன்று சிற்றுார்கள் மார்த்தாண்டன்[2] என்ற (கோட்டத்து) அதிகாரி ஒருவனால் விடப்பட்டன. அச்சிற்றுார்களாவன: (1) சேட்டுப்பாக்கம், (2) விளாங்காட்டங் கடுவனுர், (3) இறைபுனைச்சேரி என்பன.

வாகூர்ப் பட்டயப்படி, (1) விளாங்காட்டங் கடுவனுர் என்பது இன்று கடுவனூர் என்ற பெயருடன் இருக்கிறது. அது வாகூர்க்குத் தென்மேற்கில் மூன்று கல் தொலைவில் இருக்கிறது. (2) அதற்குத் தெற்கே சேட்டுப்பாக்கம் இருந்தது என்று பட்டயம் குறிக்கிறது. அப்பெயர் இன்று காணுமாறில்லை. சேட்டுப்பாக்கம் கிழக்கில்


  1. Ep.Ind.Vol. XVIII p.II 11
  2. இப்பெயர் மூன்றாம் நந்திவர்மற்கு உரியது.