பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

251



இன்றைய பாகூரையும் தன்னகத்தே கொண்டதாகப் பழைய பாகூர் இருந்தது எனக் கோடலே பொருத்தமாகும்.

அக்கிரகாரங்க

நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள் முதலிய பல கலைகளில் வல்ல மறையவரைக் கொண்ட சேரியே அக்கிரகாரம் என்பது. இத்தகைய சேரிகள் சில சங்க காலத்திலே இருந்தன என்பது பத்துப்பாட்டால் அறியலாம். கற்றறிந்த மறையவர் - வாதங்களில் வல்ல மறையவர் - கற்பிக்கும் ஆற்றல் பெற்ற மறையவர் கூடி உறைந்தமையின், மாணவர் பலர் அவர்களிடம் சென்று கல்வி கற்க வசதி இருந்தது. பொதுவாக இச்சேரிகள் ஊர்கட்கு வெளியே, அமைதி குடி கொண்ட கழனி வெளிகட்கு இடையே, இயற்கைப் பொருள்களின் நடுவே அமைந்திருந்தன. அரசர்கள் இவர்கட்குச் சிற்றுார்களை இறையிலியாக விட்டு எல்லா வசதிகளையும் அளித்தனர். இவ்விரு காரணங்களாலும் இம் மறையவர் மன அமைதியுடன் கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கினர்; இவர்களைத் தேடி வந்த மாணவர்க்கும் பலதுறைக் கல்வியைப் புகட்டினர். இங்ஙனம் மாணவர் விருப்பத்தோடு வந்து கற்பதைக் கண்ட அரசரும் செல்வரும், அம் மாணவர் இருந்து உண்டு படிப்பதற்கேற்ற விடுதிகளும் பிற வசதிகளும் செய்து தந்தனர். இங்ஙனம் சேர்ந்த பொருளைச் சேரி மறையவரே பாதுகாத்து, வேண்டிய வசதிகளை மேன்மேலும் பெருக்கிக் கொண்டே சென்றனர், கட்டடங்கள் பெருகின; வகுப்புகள் மிகுதிப்பட்டன; பிற நாட்டு நல்லறிஞர் வரின் தங்குதற்கேற்ற விடுதிகள் (சத்திரங்கள்) உண்டாயின, கோவிலும் உண்டாயிற்று. இங்ஙனம் சேரி பெரிதாய் விட்டமையின், மறையவரே ‘ஊராண்மையை'ச் சட்டப்படி கவனித்து வந்தனர். இவையே ‘குடி’ அல்லது ‘சதுர்வேதி மங்கலம்’ எனப் பெயர் பெற்ற சிற்றுர்கள். இவை பலவாக இருந்தன என்பது கல்வெட்டுகளாலும் பெரிய புராணத்தாலும் நன்கறியலாம். சம்பந்தரை வரவேற்ற சதுர்வேதி மங்கலத்தார் பலராவர்; சுந்தரர்க்கு வேண்டிய வசதிகள் அளித்த மறையவர் பலராவர். இச் சிற்றுர்களில் எப்பொழுதும் ‘மறை ஒலி'