பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8
பல்லவர் வரலாறு


(1) வடநாட்டுப் படையெடுப்புக்கேற்ற முதற்காலம் கி.மு.232 - கி.மு. 184.

இலங்கையைத் தமிழர் ஆண்ட முதற்காலம் கி.மு. 170-கி.மு.10[1]

(2) வடநாட்டுப் படையெடுப்புக்கேற்ற இரண்டாம் காலம் கி.மு.148-கி.மு.27

இலங்கையைத் தமிழர் ஆண்ட காலம் கி.மு.44 கி.மு.17க்கு உட்பட்ட 15 ஆண்டுகள்.

இவற்றுள் முன்னதைவிட இரண்டாம் காலமே மிகவும் பொருந்துவதாகும். இக்காலமே கரிகாலன் காலம் என்பதை இலக்கியம் கொண்டும் நிறுவலாம். இக்காலத்தில் கடல் வாணிபம் உயர்நிலையில் இருந்தது. கி.மு.39 முதல் கி.மு.14 வரை ரோமப் பேரரசனாக இருந்த அகஸ்டஸ் என்பானிடம் பாண்டிய மன்னன் தூதுக் குழு ஒன்றை அனுப்பினான் என்பதும் நோக்கத்தக்கது. கரிகாலன் காலத்தில் புகார் சிறந்த துறைமுகப்பட்டினம் என்பதைப் பட்டினப்பாலையால் உணரலாம். இச்சிறப்புடைக் கடல் வாணிபம் கி.பி.215 வரை, அஃதாவது அலெக்சாண்ட்ரியப் படுகொலை வரை சிறப்புற நடந்து வந்தது.[2]

புதிய சான்று

சோழ மன்னருள் இமயம்வரை சென்று மீண்டவன் கரிகாலன் ஒருவனே என்பது வெளிப்படை அவன் சென்று மீண்டது உண்மையே என்பதற்குப் புதியசான்று ஒன்று கிடைத்துள்ளது. “சிக்கிம் நாட்டுக்குக் கிழக்கே அதற்கும் திபேத்துக்கும் உள்ள எல்லையே வரையறுத்து நிற்கும் மலைத் தொடர்புக்குச் சோழ(ர்)


  1. A short History ofceylon’ pp. 722-725 by Dr. W.Gelgerin “Buddhistic Studies’ edited by Dr. B.C.Law.
  2. V.A. Smith’s “Early History of India,” p.471