பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

பல்லவர் வரலாறு



இவை நடந்தனவா?

(1) மேற் சொன்ன இரண்டு நாட்டு நிகழ்ச்சிகளிலும் முற்பகுதியின. சமணர் செய்த கொடுமைகள், பின் இரண் சவர் செய்த கொடுமைகள். கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்ன பாடலியில் இருந்த புகழ்பெற்ற சமணக் கல்லூரியைப் பற்றிய குறிப்பே காணப்படவில்லை. அச் சமணரும், பாண்டி நாட்டுச் சமணர் பலரும் கங்கநாட்டிற்குப் போய்விட்டனர்;[1] சிலர் புதுக்கோட்டைச் சீமைக்குப் போய்விட்டனர்.[2] இக் குறிப்புகளை நடுவுநிலையினின்றும் ஆராயின். பெரியபுராணம் கூறும் மேற்சொன்ன செய்திகள் பொய்யெனக் கூறல் இயலாது. அப்பர் சமணரால் துன்புறுத்தப்பட்டவர் என்பதை அவருடைய பாடல்களே விளக்கி நிற்கின்றன. வேறு சான்று வேண்டுவதில்லை. குணதர ஈச்சரம் என்ற கோவில் இப்பொழுதும் திருவதிகையில் இருக்கிறது. அது மகேந்திரன் கட்டியதுதான் என்று அதன் தூண்களே சான்று பகர்கின்றன.[3] தான் வேறு சமயத்திலிருந்து சைவனாக மாறினான் என்பதை மகேந்திரனே தன் கல்வெட்டில் அறிவித்துள்ளான். அவன் கொண்டிருந்த வேறு சமயம் சமணமே என்பதைச் சித்தன்னவாசல் ஓவியங்கள் மெய்ப்பிக்கின்றன.

(2) சம்பந்தர் பதிகங்களை நன்கு ஆராயின், அவர் திகம்பர சமணரை மனமார வெறுத்தவர்; அவர்களால் சைவசமயம் பாழாகியது என்பதை நம்பியவர் என்பன நன்கு வெளியாகின்றன. இராசராசன் காலத்தவரான நம்பியாண்டார் நம்பிதாம் பாடிய சம்பந்தரைப் பற்றிய பாக்களில் பல இடங்களில் சமணர் கழுவேற்றப்பட்டனர் என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளார். சான்றாக ஒன்று காண்க: -

“கோதைவேல் தென்னன்தன் கூடல் குலநகரில்
வாதில் அமணர் வலிதொலையக்-காதலால்


  1. MVK. Rao’s “Gangas of Talakad” pp.272.
  2. “Naratha Malai & its Temples, J.O.R. 1933.
  3. நான் இக் கோவிலை நேரிற் சென்று பார்வையிட்டேன்.