பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/290

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
270
பல்லவர் வரலாறு


பிராமணர்க்கு அளித்தான்” என்பது உதயேந்திரப் பட்டயத்திற் காணப்படுகிறது. இக்குறிப்பைப் பற்றி அறிஞர் தாமஸ் போக்ஸ், “இந்த நிலத்துக்கு உரியவர் சமணர் அவர்களை அழித்து இந்நிலத்தைப் பிறர்க்குக் கொடுத்தமை என்பது, பல்லவ மல்லன் வரலாற்றில் ஒரு களங்கத்தை உண்டுபண்ணிவிட்டது. எனினும், இச்செயல் அக்காலநிலையை ஒட்டியதாகும்”[1] எனக் கூறியிருத்தல் கவனிக்கத்தக்கது. இதனால் வைணவனான பல்லமல்லன், தன் முன்னோர் சமணர்க்கு விட்டிருந்த நிலத்தைக் கவர்ந்து, மறையவர்க்கு உரிமையாக்கினான் என்பது வெளிப்படை.

பல்லவ அரசர் பௌத்தர்க்கு நிலம் விட்டதாக இது காறும் ஒரு பட்டயமோ-கல்வெட்டோ கூறாதிருத்தல் இங்கு நினைக்கத்தக்கது.[2]

சிற்பச் சான்று

பரமேச்சுர விண்ணகரத்தின் உட்சுவர் நிறையச் சிற்பங்கள் அழகொழுகக் காட்சி அளிக்கின்றன. அவற்றில் சில சிற்பங்கள் பல்லவ மன்னன் சமயக் கொள்கையைக் குறிக்கின்றன; ‘அரசன் அரியணையில் அமர்ந்துள்ளான். அவனுக்குப்பின் ஒருத்தி கவரி வீசுகிறாள். அரசர்க்கு எதிரில் துறவிகள் இருவர் கழுவேற்றப்பட் டுள்ளனர். இச்சிற்பத்திற்கு வலப்புறம் ஆழ்வார் சிலைகொண்ட கோவிலையும் அதன் வலப்புறம் வைகுந்தப்பெருமாள் கோவில் போன்றகோவிலையும் குறிக்கும் சிற்பங்கள் காண்கின்றன. ஆழ்வார் சிலை, முதல் மூன்று ஆழ்வாருள் ஒருவரைக் குறிப்பதாகலாம். அவர் அக்காலத்திற்பூசிக்கப்பட்டனர்போலும்! சமணர், புத்தர் போன்ற புறச் சமயத்தவரை அழித்துவைணவம் நிலை நாட்ட முயன்றதைத் தான் இச் சிற்பங்கள் உணர்த்துகின்றன. இஃது அக்காலத்தை ஒட்டிய செயல் போலும் கழுவேற்றப்பட்டவர் யாவராயினும் ஆகுக: இச்


  1. Indian Antiquary, Vol. VIII. p.281.
  2. Dr.c. Minakshi’s “Administration and Social Life under the Pallavas’, p.172.