பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

273



திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) சிவபெருமானுக்குக் கொங்கு வீரர் தம் தலைகளையும் நாக்குகளையும் பலி இட்டமை கல்வெட்டுச் செய்தியாகும்.

இப் பிற்காலக் கல்வெட்டுச் செய்திகளையும் முன்சொன்ன சிற்பங்களையும் நோக்க, பல்லவர் காலத்தில் உயிர்ப்பலி இடுதல் என்பது கிளைச்சமயத்தார் சிலரேனும் கையாண்டு வந்த பழக்கம் என்பதை அழுத்தமாகக் கூறலாம், அஃதாவது பைரவர்க்கும் காளிக்கும் உயிர்ப்பலி கொடுக்கப்பட்டது எனக் கூறலாம் கூறவே, சிறுத்தொண்டர் தம் ஒரே மகனைப் பைரவர்க்குப் பலியிட்டுச் சமைத்துப் படைத்ததில் வியப்பில்லை அன்றோ?


21. இசையும் நடனமும்

இசை

நாகரிக நாட்டுக் கலைகளாகப் போற்றப்படும் இசை, நடனம், ஓவியம். சிற்பம், காவியம் என்பவற்றைப் பல்லவ அரசர் போற்றி வளர்த்தனர். ஒவியமும் சிற்பமும் அவர் தம் ஆட்சியில் பெற்றிருந்த மேனிலையை அவர்தம் குகைக் கோவில்களிலும் கயிலாசநாதர் கோவில். வைகுந்தப் பெருமாள் கோவில் போன்ற கற்றளிகளிலும் கண்டு கண்டுகளிக்கலாம். அவை இந்நூல் அடுத்த பகுதியிலும் பிற இடங்களிலும் விளக்கப்பட்டுள்ளன. ஆதலின், இங்கு இசையும் நடனமும் சிறிது காண்போம்.

மகேந்திரவர்மனும் இசையும்

இவன் பல்லாவரம் குகைக்கோவில் கல்வெட்டில் தன்னைச் ‘சங்கீரண சாதி’ என்று கூறியுள்ளான். இதனைப் பிறழ உணர்ந்த அறிஞர் பலர், இவன் தமிழ்த் தாய்க்கும் சிம்மவிஷ்ணுவுக்கும் பிறந்தவன் எனப் பொருள் கொண்டனர். அது தவறு. இவன் தாளவகைகள் ஐந்தனுள் (சதுரஸ்ரம், திஸ்ரம், மிஸ்ரம், கண்டம்.