பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/298

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
278
பல்லவர் வரலாறு


பயன்படுத்தினர். அரசர் ஆதரவு பெற்ற அப்பெருமக்கட்கு என்ன குறை சுருங்கக் கூறின் ‘பல்லவர் நாடு இசைக் கலையில் கந்தர்வ நாட்டை ஒத்திருந்தது’ என்று கூறி முடிக்கலாம்.

மகேந்திரன் கால நடனம்

மகேந்திரவர்மன் காலத்துச் சித்தன்ன வாசல் ஒவியங்கள் இரண்டிலிருந்து கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டில் இருந்த நடனக்கலையை நன்குணரலாம்.

(1) வலப்பக்கத்து நடிகை தன் இடக்கையை ‘யானைக்கை’ நிலையிலும், வலக்கையின் அங்கையைச் ‘சதுர’ நிலையிலும் வைத்திருத்தல் நோக்கத்தக்கது. இந்த நடன நிலை மிக உயர்ந்தது. இதனைப் பிற்கால நடராசர், சிலைகளில் எல்லாம் நன்கு காணலாம். சிவனார் ஆடிய ‘நாதாந்த நடனத்தில்’ இவ்வமைப்பைத் தெளிவாகக் கண்டுகளிக்கலாம்.

Page298-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg