பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
பல்லவர் வரலாறு


வேந்தன் கொற்றப் பந்தரும், அவந்தி வேந்தன் தோரண வாயிலும் கொடுத்தனர் எனச்சிலப்பதிகாரம் செப்புவதில் பொருள் இராதன்றோ? இந்நாட்டரசர் சந்திரகுப்த மெளரியன் காலத்திலிருந்து சிற்றரசராகவும் அடிமைப்பட்டும் ஹர்ஷனுக்குப் பின்னும் இருந்து வந்தனர் என்பதற்கு வரலாறே சான்றாகும்.[1]

கோச்செங்கட் சோழன்

இதுகாறும் கூறிவந்த சான்றுகளால் (1) கரிகாற் சோழன் காலம் ஏறக்குறைய கி.மு.60 கி.மு.20 எனவும், (2) செங்குட்டுவன் வடநாடு சென்ற காலம் ஏறக்குறைய கி.பி. 166-193 எனவும் கூறலாம். செங்குட்டுவன் 50 ஆண்டுகள் அரசாண்டவன் எனச்சிலப்பதிகாரம் கூறலால், அவன் காலம் ஏறத்தாழக் கி.பி. 150-200 எனக் கோடலே பொருத்தமுடையதாகும். இச் சேரன் செங்குட்டுவனால் முறியடிக்கப்பட்ட சோழன் ஒன்பதின்மருள் ஒருவனான சுபதேவன் சிதம்பரத்தில் தலைமறைவாக வாழ்த்து வந்தான். அவனுக்குச் சிவபிரான் அருளாற் பிறந்தவனே சிறந்த சிவபக்தனான கோச்செங்கட் சோழன் என்பவன்.[2] இவன் சோணாட்டைப் பேரரசனாக இருந்து ஆண்டான் சேரனைப் புறங்காட்டச் செய்து கனவழி பாடப் பெற்றான். எனவே, இவன் காலம் ஏறக்குறைய கி.பி. 200-225 எனக் கூறலாம். இவனைப் பாடிய பொய்கையாரே முதல் ஆழ்வார் மூவருள் ஒருவராகிய பொய்கை ஆழ்வார்.[3] இக்கோச் செங்கட்சோழன் மணிமேகலையில் கூறப்பட்ட பெருங்கிள்ளிக்குப் பின் சோழ மன்னனாக இருந்திருத்தல் வேண்டும். இவன் சிவபிரான் அருளால் தோன்றியவன் ஆதலின், தான் பிறந்த சிதம்பரத்தைச் சிறந்த சிவப்பதியாக்கினான்; தில்லைவாழ் அந்தணரைக் கொண்டு முடிசூட்டிக் கொண்டான். அன்று முதல் சோழர்க்கு முடிசூட்டும் பொறுப்புத் தில்லைவாழ் அந்தணரிடம் விடப்பட்டது. இவன் பொய்கை ஆழ்வாரால் பாடப்பட்டமையின், சைவ-வைணவ


  1. V.A. Smith’s Early History of India’, p.369
  2. Dr. S.K.Alyangar’s Ancient India, pp.95-6
  3. Dr. S.K. Aiyangar’s “Early History of Vaihaavism in S.India’ pp.72-75