பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/300

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
280
பல்லவர் வரலாறு


“ஆடினார் பெருங்கூத்துக் காளி காண.”
வைகுந்தப்பெருமாள் கோவில்

இக் கோவிலில் நடனம் பற்றி இரண்டு சிற்பங்கள் காணப் படுகின்றன:

(1) அரசன் முன்னிலையில் ஆடவரும் பெண்டிரும் நடித்தல்-ஆடவன் ஒருவன் அழகாகத் தன்னை அணி செய்து கொண்டு பக்கத்துக்கொருவராக அழகியநங்கையர் இருவருடன் நிற்கின்ற நிலை என்பன காணத்தக்கன. அரசனது அவை முன்னர் இக்கூத்துநடைபெறுகிறது. இக்கூத்து முடிந்த பின்னர் மற்போர் நடைபெறுகிறது. இங்ஙனம் நடனத்திற்குப் பிறகு அதே இசை ஒலியுடன் மற்போர் நடைபெறல் பண்டை வழக்கம் போலும்![1]

(2) நடிகர் ஒன்பதின்மர் அரசன் அவையை அடைகின்றனர். முதல்வன் இசைமுழக்கத்துடன் உள் நுழைகிறான். அவனுக்குப்பின் ஆடவர் அறுவரும் பெண்டிர் இருவரும் செல்கின்றனர். இவ்விரண்டு சிற்பங்களோடு, சிலப்பதிகாரச் செய்திகளையும் நோக்க, பல்லவர் காலத் தமிழகத்தில் இருபாலரும் நடனத்தில் வல்லவராய் இருந்தனர் என்பதும், இருபாலரும் கலந்து ஆடிவந்தனர் என்பதும் நன்கறியலாம். இங்ஙனம் இருபாலரும் சேர்ந்து நடித்தலைப் பல்லவப் பெருவேந்தர் பாராட்டி வளர்த்தனர் என்பதும்

அடிகள்மார்

பல்லவர் காலத்துக் கோவில்களில் இசையும் நடனமும் வளர்க்கப்பட்டன. இவை இரண்டும் சமயத்தின் உறுப்புகளாகக் கருதப்பட்டன. பல கோவில்களில் இவ்விரண்டையும் வள்ர்க்கப் பெண்கள் இருந்தனர். அவர்கள் அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையர் முதலிய பெயர்களால் குறிக்கப் பெற்றனர். முத்தீச்சுரா


  1. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas’, p.280.