பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

287



இருக்கின்றன. மேலாடைகள் இரண்டில் ஒன்று மேலாக இடையில் கட்டப்பட்டுள்ளது; மற்றொன்று மிக்க வனப்புடைத் தோற்றத்துடன் தோள் சுற்றிப் பின்னே விடப்பட்டுள்ளது. அவ்வாடையின் சுருக்கம் முதலிய அமைப்புகள் மிகவும் தெளிவாகவும் ஒழுங்காகவும் ஒவியத்தில் காட்டப்பட்டிருத்தல், அக்கால ஓவியக் கலை அறிவின் நுட்பத்தை நன்கு விளக்குவதாகும்.

இடத்துண்மீதுள்ள நடிகையின் உருவம் முன்னதைவிட அழகாகவும் மென்மைத்தோற்றம் உடையதாகவும் உள்ளது. இம் மாதரசியின் மயிர்முடி முன்னதைவிடச் சிறிதளவு வேறுபாடு கொண்டது. எனினும், அணிவகைகளில் வேறுபாடு இல்லை. இந் நடன மாதர்க்கு மூக்கணி இல்லை. இங்ஙனமே சிற்பங்களில் காணப்படும் பல்லவ அரசியர்க்கும் மூக்கணி இல்லை. காரணம் புலப்படவில்லை.[1] இவ்வுருவம் சிதைந்துள்ளதால் மேலாடை முதலியன தெளிவுறத் தெரியவில்லை.

இம்மங்கையர் அடிகள்மார் என்று சிலர் கருதுகின்றனர். இவர்கள் அப்சரப் பெண்மணிகள் என்று வேறு சிலர் கருதுகின்றனர். இவர் யாவரே ஆயினும் ஆகுக. இவர் தம் ஓவியங்கள். (1) பல்லவர் காலத்துப்பெண்மணிகள் அணிந்தநகைவகைகளும், சிறப்பாக உயர நிலையில் இருந்த நடனமாதர் அணிந்துவந்த அணிகலன்களும், (2) அக்கால நடிகையர் கூந்தல் ஒப்பனையும், (3) மேலாடைச் சிறப்பும், (4) அக்காலத்து நடனக் கலை நுட்பங்களும் நாம் அறியும் வகையில் துணை செய்கின்றன என்பதில் ஐயமே இல்லை.


  1. Dr.C.Minakshi’s “Administration and Social Life under the Pallavas,’ p.291. இங்ஙனமே அமராவதி சிற்பங்களில் காணப்படும் பெண்மணிகட்கும் மூக்கணி இல்லை. இது பண்டைநாகரிகம் போலும்!-Dr.K.Gopalachari’s “Early History of the Andhra Country”, p.99.