பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

பல்லவர் வரலாறு



“அறக்களத் தந்தனர்.ஆசான் பெருங்கணி
சிறப்புடைக் கம்மியர்தம்மொடும் சென்று
மேலோர் விழையும் நூல்நெறி மாக்கள்
பால்பெற வகுத்த பத்தினிக் கோட்டமும்

எனவரும் சிலப்பதிகார அடிகளாலும் (நடுகற் காதை, வரி 222-225),

“பைஞ்சேறு மெழுகாப்பசும்பொன் மண்டபம்”

எனவரும் மணிமேகலை (சிறைக்கோட்டம்...... காதை, 105) வரியாலும் நன்குனரக் கிடத்தல் காண்க. இறுதுயிற் கூறிய மண்டபம் பல நாட்டு விற்பன்னருடன் தண்டமிழ் வினைஞர் சேர்ந்து அமைத்த அற்புதமண்டபம் என்று மணிமேகலை கூறுகின்றது. அம் மண்டபத் தூண்கள்மீது பன்மணிப் போதிகைகள் இருந்தன: அவற்றின்மேற் பொன்விதானங்கள் இருந்தன. தரை சாந்தால் மெழுகப்பட்டு இருந்தது.

அரசர் கோவில்களும் தெய்வங்களின் கோவில்களும் சுற்று மதிலையுடையன, உயர்ந்த வாயில்களை உடையன; அவ்வாயில்கள்மீது உயர்ந்த மண்ணிடுகள் (கோபுரங்கள்) இருந்தன: அம் மண்ணிடுகளில் வண்ணம் தீட்டப்பெற்ற வடிவங்கள் அமைந்திருந்தன என்பது, மணிமேகலை[1] மதுரைக் காஞ்சி[2] முதலிய நூல்களால் நன்குணரலாம்.

இக் கோவில்கள் அனைத்தும் செங்கற்களால் அமைந்தவை. மேலே உலேகத் தகடுகளும் சாந்தும் வேயப்பட்டிருந்தன. இங்ஙனமே உயர்ந்த மாடமாளிகைகளும் இருந்தன.

“விண்பொர நிவந்த வேயா மாடம்”
“சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு”[3]
  1. சக்கரவாளக் கோட்டம், வரி:42-48, 58:59, மலர் வனம் புக்ககாதை, 127 - 131.
  2. மதுரைக்காஞ்சி, வரி:352-355.
  3. பெரும்பாண் ஆற்றுப்படை. வரி 348இ 405.