பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/323

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
303
மூன்று ஐயங்கள்


அறியலாம். அவற்றைக் கொண்டே செங்கல், சுண்ணாம்புக் கோவில்கள் தோன்றின என்பன அறியலாம்.[1]

நீலகிரி மலையில் உள்ள தொதவர் கோவில் பார்க்கத்தக்கது. வட்டமான கற்சுவர் கோவில் எல்லையை வகுப்பதாகும். இத்துடன் திருநெல்வேலியில் உள்ள பேய்க் கோவில்கள் ஒருமைப் படுகின்றன. இக் கோவில்களே பண்டைய திராவிடர் கட்டட அமைப்பைக் காட்டுவன. தொதவரிடமுள்ள இருவகைக் கோவில்களில் கோபுரம்போல அமைந்துள்ள கோவில்களே பழைமை வாய்ந்தவை: தொலைவிலிருந்து பார்ப்பவர் அதனைக் கிறித்துவர் கோவிற்கோபுரம் எனக்கருதுவர்.[2] இம்மாதிரியே வட இந்தியாவில் உள்ள கோவில்கள் அமைந்துள்ளன. இதனால். இந்தியாவிற் புகுந்தவுடன் ஆரியர் இவ்வமைப்பைத் திராவிடரிடமிருந்து கடன் பெற்றனர் எனக் கூறலாம். ஆனால், இந்த அமைப்பு தென் இந்தியாவில் சதுரக் கோவில்கள் (Dolmens) அமைப்புடன் கலந்து வேறு புதிய அமைப்பைப் பெற்றுவிட்டது. ஆதலின், இருவகைக் கோவில் அமைப்புகள் தெற்கே பரவலாயின.[3]

பாணினி காலத்தில் கோவில்கள் இருந்தன. சாணக்கியர் காலத்திற் கோவில்கள் விமானங்களுடன் இருந்தன: அசோகன் காலத்தில் இருந்தன. இக்கோவில்கள் புத்தருக்குமுன்னரேநாட்டில் இருந்தன. கோவில் கட்டுதல் திராவிடரது பழக்கம் ஆகலாம். அதனைப் பிற்காலத்தில் ஆரியர் கைக்கொண்டனர்.[4]

திராவிடக் கலை

தூபி, சைத்தியம் என்பன திராவிடருடையன. இவற்றை ஆரியர் கடன் பெற்றனர்; இவை பிற்கால இந்து சமயக் கோவில்களில் காணப்பட்டன. இவற்றையே புத்தர் மேற்கொண்டனர்.[5] விமான


  1. A.K.Kumarasamy’s ‘Arts and Crafts’, pp.118-119
  2. G.Oppert’s “The Original Inhabitants of the India,’ p.573.
  3. N. Venkataramanayya’s “Origin of S.I. Temple’, p.67.
  4. Ibid p.44
  5. Ibid p.39-55.