பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/325

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
305
மூன்று ஐயங்கள்


தென்னாட்டுக் கட்டடக் கலை (Architecture) தமிழகத்துக்கே உரியது. இன்றுள்ள வானளாவிய கோபுரங்கள், விமானங்கள், இவற்றில் காணப்படும் வேலைப்பாடுகள் அனைத்தும் இந்நாட்டுப் பழைய வேலைப்பாடுகளிலிருந்து வளர்ச்சியுற்றவையே ஆகும். இந்த வளர்ச்சி பல நூற்றாண்டுகளாக உண்டானவை. மனிதக் குரங்கின் மண்டை ஓட்டிலிருந்து இன்றைய மனிதனது மண்டை ஓடு வளர்ச்சியுற்றாற்போலவே தமிழகக்கட்டடக்கலையும் இயல்பாகவும் அமைதியாகவும் செம்மையாகவும் வளர்ச்சி பெற்று வந்ததாகும். இதன் உண்மையை மாமல்லபுரத்துத் தேர்களைக் கொண்டும். திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவபிரான் கோவில் வேலைப் பாட்டைக் கொண்டும் நன்கறியலாம்.[1]


24. இலக்கியம்

முன்னுரை

பல்லவர்காலம் ஏறத்தாழக்கி.பி. 250 முதல் 900 முடிய என்னலாம். இந்தக் காலத்திற்குப் பிறகு சோழப்பேரரசு வளர்ச்சியுற்றது. அக்காலத்தில். சங்ககாலத் தமிழில் இல்லாத அளவு வடமொழிக் கலப்புத் தமிழில் உண்டாகிவிட்டது. இதனை அக்கால யாப்பருங்கலவிருத்தி. காரிகை, வீரசோழியம் முதலிய இலக்கண நூல்கள் கொண்டும், பெரிய புராணம், கம்ப ராமாயணம், கலிங்கத்துப்பரணி, ஒட்டக்கூத்தர் பாடிய நூல்கள் முதலியன கொண்டும் நன்குணரலாம். எனவே, சங்கநூல்கட்கும் இச்சோழர்கால நூல்கட்கும் உண்டான மொழி நடைவேறுபாடு, இரண்டிற்கும் இடைப்பட்ட பல்லவர் காலத்திற்றான் உண்டாகி வளர்ந்திருத்தல் வேண்டும். இஃதே உண்மை என்பதை யாப்பருங்கல விருத்தியுரை நன்குவிளக்கிநிற்றல் காணலாம்.கானவே, பல்லவர்கால இலக்கியம் தமிழ் இலக்கிய வரலாற்றிற் சிறப்பிடம் பெறத்தக்கதாகும்; ஆதலின் இங்கு ஓரளவு நன்கு விளக்கம் பெறும்.


  1. Prof. Dubreiul’s “Dravidian Architecture’, pp.1-10, 22.