பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

309



என்பதைக் குறிக்கிறது. இவர் பாடியனவாக ஆறு பாடல்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று காண்க.

“எண்கிண் இருங்கிளையும் ஏறற் கரியவே
வண்கைச் செருமாறன் வாள்காய்த்தி-விண்படர்சேய்
வானாடு தாமூர்ந்த மாநாடக் கண்ணனூர்க்
கோனாடர் புக்கொளித்த குன்று.”[1]

இவற்றால் அறியப்படுவன

இந் நான்கு புலவரும் கி.பி. 8 ஆம் நூற்றாண்டினர் என்பதை எண்ண, உண்மையாகவே உள்ளம் மகிழ்கிறது. வடமொழி வளர்த்த பல்லவர் காலத்தில் தமிழ் இந்த அளவேனும் வளர்த்த தென்பது போற்றத்தக்கதே அன்றோ?

இப்புலவர் பெருமக்கள் என்னென்ன நூல்களைப் பாடினார்களோ, அறியோம்; அவை கிடைத்தில. அந்தக்காலத்தில் வெண்பாவும் கட்டளைக் கலித்துறையுமே பெருவரவீன என்பதை மேற் சுட்டிய பாடல்கள் விளக்குகின்றன. சங்க காலத்தில் அகவலே பேரிடம் பெற்று விளங்கினது: கலிப்பாஓரளவு பயன்பட்டது. வெண்பா அருகி வழங்கியது. பல்லவர் காலத்தில் வடமொழிப் புலவர் இந்நாட்டில் பேரளவிற்கு குடிபுகுந்து வடமொழியைப் பரப்பின்மையால் அம்மொழியின் செய்யுள் இலக்கண அமைதிகள் தமிழிற் பரவின. அப் பரவலின் பயனாக விருத்தம் முதலியன தமிழிற் பயிலலாயின். தமிழ் யாப்பிலக்கண முறையிலேயே வடமொழிக் கலப்பு உண்டான காலம் பல்லவர் காலமே ஆகும் என்பது கி.பி.11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த அமிதசாகரர் செய்த யாப்பருங்கல விருத்தியுரையால் நன்குணரப்படுகிறது.

பல்லவரும் தமிழும்

மகேந்திரவர்மன், இரண்டாம்நந்திவர்மன் மூன்றாம்நந்திவர்மன், அபராசிதவர்மன் இவர்களே தமிழ் அறிவு பெற்றிருந்தனர் என்பது 498.


  1. M.Raghava Iyengar’s “Sasans Tamil Kavi Saritam’ pp.17-21.