பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13
பல்லவர்க்கு முற்பட்ட தமிழகம்


தொண்டைமான் காலத்தில், ஏன்? சங்ககாலத்திலேயே காஞ்சிபுரம் கச்சி என்ற பெயர் பெற்று இருந்தது. அந்நகரம் சிறந்த உலக நகரங்களுள் ஒன்று தேரோடும் தெருக்களையும் பழங்குடிகளையும் மதிலையும் உடையது. இளந்திரையன் பாண்டவரைப் போலப் பகைவரை வென்றவன்: தொண்டையர்குடியிற் பிறந்தவன்: பகைவர் அரண்களை அழித்தவன்: யானைகள் கொணர்ந்த விறகால் வேள்வி செய்தமுனிவர்கள் வாழ்ந்த மலைகட்கு உரியவன்; நான்கு குதிரைகள் பூட்டியதேரை உடையவன்.[1]

ஆனால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலும் கடைப் பகுதியிலும் அஃதாவது, சிலப்பதிகார மணிமேகலைக் காலத்தில் காஞ்சிபுரம் இளங்கிள்ளி என்பவன் ஆட்சியில் இருந்ததாகத்தெரிகிறது. அவன் புத்தர் கோயில் ஒன்றைக் கட்டியிருந்தான். அங்குச் சென்ற மணிமேகலை புத்த பீடிகையை அமைத்தாள்: தீவதிலகையையும் மணிமேகலா தெயவத்தையும் வழிபடக்கோட்டங்கள் அமைத்தாள்; பின்னர் அறவண அடிகளிடம் தவத்திறம் பூண்டு தருமம் கேட்டாள்; ‘பவத்திறம் அறுக, என்று அங்குத்தானே தவம் கிடந்தாள்.[2]

வலியற்ற வட எல்லை

இளங்கிள்ளிகாலத்தில் தொண்டைநாடு நெல்லூர்க் கோட்டத்தில் உள்ள பாவித்திரி (ரெட்டிபாளையம்) வரை பரவியிருந்தது. அங்குக கிடைக்கும் பட்டயங்கள் அப்பகுதியைக் ‘கடல் கொண்ட காகந்திநாடு என்று கூறுகின்றன. நகரி மலைகளைச் சார்ந்த குறிஞ்சிப் பகுதி தொண்டை மண்டலத்தின் வட எல்லையாகும். அந்தப் பகுதியில், வடக்கே இருந்த சாதவாகனர் (ஆந்திரர்) க்கும் தொண்டை மண்டலத்தை ஆண்ட சோழர்க்கும் எப்பொழுதும் எல்லைப் பூசல்கள் நடந்து வந்தன. எனவே, இப் பகுதி வன்மை குன்றிய பகுதியாகும். அப்பகுதியில் இளங்கிள்ளி காலத்தில் சேரனும் பாண்டியனும் பெரும்படையோடு வந்து போரிட்டனர். காரியாறு


  1. Ibid II. 410-500
  2. Ibid II. 28-30