பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

311



“தொண்டையந்தார்வேந்தன் நரேந்திரப் போத்தரையன்
வெண்கோட்டின் றென்பான்மிகமகிழ்ந்து-கண்டான்
சரமிக்க வெஞ்சிலையர்ன் சத்ருமல்லே சம்மென்று
அரனுக் கிடமாக அன்று.”[1]

என்பது.

பல்லவ மன்னன் (கி.பி. 719-775) இவனைப் பற்றிய பாக்கள் சில யாப்பருங்கல விருத்தியுரையுட் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று ‘பல்லவமல்லன்’ என்ற பெயரையே சுட்டுகின்றது. அஃது எட்டாரைச் சக்கரத்தை விளக்க வந்த மேற்கோள் செய்யுள் ஆகும்.

“.... ........... .....
காடவர்கோன் திரு ஆரமிழ் தாடவர்க்”
.........................
“யாராழி பாய்ந்த விடந்தோ றழகிதாப்
பாராளும் பல்லவ மல்லன் என்றா-ராய்ந்(து).....”
.......................
-பாரில்
“தருமலிந்த வண்மைத் தலைத்தந்து மிக்க
திருமலிந்து தீதிலவே யாக-உருமலிந்த
என்னரசன் மல்லன் மதினிலை யேதிலர்கள்
துன்னரிய வஞ்சினத்தான் தோள்.”[2]

யாப்புநரல் பெருக்கம் (கி.பி. 250-900)

கி.பி. 11ஆம் நூற்றாண்டில் யாப்பருங்கல விருத்தி செய்யப் பட்டது; உரையும் அதே காலத்தில் ஆனது. இதனில், சங்கத்தார் பாடல்கள் சிறுவரவினவாயும், வடமொழி வழக்குப்பற்றித் தோன்றிய


  1. தளவானுர்க் குகைக் கோவில் கல்வெட்டு; ‘சத்ரு மல்லன்’ என்பது மகேந்திரன் வருதுகளுள் ஒன்று.
  2. இம் மூன்று பாடல்களுள் பல்லவ மல்லனையே பற்றியவை. யா-விருத்தி, பாகம் 2, பக், 520-522 இப்பாடல்கள் பல்லவமல்லன் காலத்திலே செய்யப்பட்டவை என்பது ‘பாராளும் பல்லவவமல்லன்’ என்ற தொடரால் உணரலாம்.