பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/333

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
313
மூன்று ஐயங்கள்


(3) “செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீத
சந்தனமென்றாரோ தடவினார்-பைந்தமிழை
ஆய்கின்ற கோனந்தி ஆகம் தழுவாமல்
வேகின்ற பாவியேன் மேல்”
(4) “திருத்தேர் புகழ்நந்தி தேசபண்டாரி தெள்ளாறை[1] வெற்பில்
மருத்தேர் குழலிக்குக் கார்முந்து மாகில், மகுடரத்னப்
பரித்தேரும் பாகனும் என்பட்டவோஎன்று பங்கயக்கை
நெரித்தே வயிற்றில்வைத் தேநிற்பளேவஞ்சி நெஞ்சு லர்ந்தே”[2]
(5) ‘வானுறு மதியை அடைந்ததுன் வதனம்;
வையகம் அடைந்ததுன் சீர்த்தி;
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்;
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்;
தேனுறு மலராள் அரியிடம் சேர்ந்தாள்;
செந்தழல் புகுந்ததுன் மேனி;
யானுமென் கவியும் எவ்விடம் புகுவேம்!
எந்தையே! நந்திநாயகனே!”[3]

அபராசிதவர்மன் (கி.பி. 875-893)

இவன் பல்லவர் மரபில் இறுதி அரசன் கி.பி. 875-க்குப் பிறகு நாட்டை ஆண்டவன். இவன் காலத்தே. நம்பி அப்பி என்பவன் திருத்தணிகை - வீரட்டானேசுவரர் கோவிற்குத் திருப்பணிகள்


  1. தெள்ளாறு - வட ::ஆர்க்காட்டுக் கோட்டம் வந்தவாசி தாலுக்காவில் உள்ள ஊர்.
  2. இது கோவைப் பாடல்போலும் நந்திக்கோவை என்பதொன்று ‘நந்திக் கலம்பகம்’ என்பதுபோல இருந்ததுபோலும்! அது நந்திவர்மன் தெள்ளாற்றுப் போரில் தமிழரசரை வென்றபின் பாடப்பட்டதாகலாம்.
  3. நந்திக்கலம்பகத்தின் இறுதியிற் சேர்க்கப்பெற்ற பாடல்களில் ஒன்று; கையறுநிலை.