பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

315



“இந்தப்பத் தெச்சமும்
புவிபுகழ் புலமை அவிநய நூலுள்
தண்டலங் கிழவன் தகைவரு நேமி
எண்டிசை நிறைபெயர் இராச பவித்திரப்
பல்லவதரையன் பகர்ச்சியென்றறிக.”[1]

இதனால், இவர் தண்டலத்தைத் தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்த பல்லவ மரபினர் என்பதும், புலமை நிறைந்த இப்பெரியார் அவிநயத்துக்கு உரை கண்டு மகிழ்ந்தவர் என்பதும் பெறப்படுகின்றன. இவர் காலம் அறியக்கூடவில்லை.

பொதுப்பாடல்

இது பல்லவ அரசன் ஒருவனது ஆணைப்படி அவன் எல்லைப்புற வீரர் வடுகர் முனைச்சுரும் கடந்து பசு நிரை கவர்ந்த செய்தியைக் குறிப்பதாகும். காலம் கூறக்கூடவில்லை.

“நகில்பொழி தீம்பால் மண்சேறுபடுப்ப
மலர்தலை உலகம் ஒம்பும் என்ப
பரிசிலை தொண்டைப் பல்லவன் ஆணையின்
வெட்சித் தாய்த்து வில்லேர் உழவர்
பொருந்தா வடுகர் முனைச்சுரம்
கடந்து கொண்ட பலஆனிரையே.”[2]

வேறு பல நூல்கள் (கி.பி. 250-900)

இதுகாறும் கூறப்பெற்ற சில்லரைப் பாடல்களால், சங்க காலத்திற்குப் பிறகு வந்த பல்லவர் காலத்தில் புலவர்பலர் இருந்தனர் என்பது வெள்ளிடை மலைபோல் விளங்கித் தோன்றும்.[3]


  1. சூ.359. உரை.
  2. தொல் அகத். சூ54உரை. இதனால்; இது நச்சினார்க்கினியர் காலம் வரை வழக்கில் இருந்தமை தெரிகிறது அன்றோ?
  3. கி.பி. 250 முதல் 900 வரை தமிழகத்திற் பல்லவப் பேரரசே இருந்தமையால், அக்காலத்திற் செய்யப்பட்ட தமிழ் நூல்களிற் பெரும்பாலான பல்லவப் பெருநாட்டிற் செய்தனவாகக் கொள்ளப்பட்டன. மேலே கண்டவற்றுட் சில பாண்டிய - சேரநாடுகளிலும் செய்யப்பெற்றவாக இருக்கலாம்.