பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

319



சிறந்த வைணவர் என்பது வியப்புக்குரியது. இஃது அப் பேரரசனது பரந்த அறிவின் மாட்சியை விளக்குவதாகும் அன்றோ?[1]

நூற் செய்திகள் சில: (1) இவர் பாரதப் போரில் பல்லவரும் போரிட்டனர் எனக் கூறுதல்நகைப்பைத்தருகிறது. பல்லவர் மட்டும் இல்லை; குந்தளர் (கதம்பர்), சாளுக்கியர், கொங்கணர், கங்கர் முதலியதம் கால அரசரையும் பாரதப்போரில் இழுத்துவிட்டனர்.[2] (2) இவர் “மீகாமன் இல்லாத மரக்கலந்தான் ஆக்கினாய் வேந்தர் ஏறே”[3] என ஓரிடத்தில் உவமை கூறிஇருத்தல் தம் காலத்துக் கடல் வாணிய உணர்ச்சியால் என்னல் தவறாகதன்றோ?

(3) இவர் குறித்த வைணவத் தலங்கள்: திருவேங்கடம், திருமாலிருஞ்சோலைமலை, திருஅரங்கம் திருஅத்தியூர் என்பன. எனவே, இவை இவர் காலத்தில் மிக்க சிறப்புற்றனவாக இருந்திருக்கலாம் என்பதை நம்பலாம்.

“தேனோங்கு சோலைத் திருவேங்கடமென்றும்
வானோங்கு சோலை மலையென்றும்-தானோங்கு
தென்னரங்க மென்றும் திருவத்தி யூரென்றும்
சொன்னவர்க்கும் உண்டே சுகம்.”[4]

(4) தொகைநூல் தொகுப்பாளரா?: இப் பெருந்தேவனார், ‘எட்டுந் தொகையின் தொகுப்பாளர்’ என அறிஞர் சிலர் கருதுகின்றனர். களப்பிரர் குழப்பத்தால் பாண்டிய அரசு திடீரென வீழ்ந்ததாக வேள்விக்குடிப் பட்டயம் பகர்கிறது. அதனால், அதற்கு முன்னரே சங்கம் முற்றுப் பெற்றதாகக் கூறமுடியாது. அது திடீரென நின்றுவிட்டதாகல் வேண்டும். பின்னர் வந்த பாண்டியர் எவரும் அதைப்பற்றிக் கவலை கொண்டதாகவும் தெரியவில்லை.பல நூல்கள் அழியக் காரணம் களப்பிரர் குழப்பம், முதல், இடைக்காலப்


  1. M. V. Rao’s “Gangas of Talakad’, p. 276
  2. S.387, 484, 514, 546, 559, 571, 583, 590, 618, 629, 678, 711 S.773
  3. S.669
  4. S. 484