பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/341

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
321
மூன்று ஐயங்கள்


என்ற தலங்கள் குறிக்கப்பெற்றுள்ளது.அழகிய பொருட் செறிவுடைய பாக்களைத் தன் அகத்தே பெற்றது. சேரமான் தன்னைச் செவிலி யாகவும், தலைவியாகவும் வைத்து இப் பாடல்களைப் பாடியுள்ளார். வருணனை மிக்கபாக்கள் சிலவுண்டு. அவற்றில் ஒன்று காண்க. சிவனார்,

சடை-எரிகின்ற தீப்போன்றது.
கங்கை-அத் தீக்குச் சொரியும் பாற்கடல் போன்றது;
(நீரில் சரிகின்ற திங்கள்-தோணி போன்றது;
அரவு-தோணி செலுத்துவோனைப் போன்றது.[1]

ஒரு செய்யுளில் மும்மூர்த்திகளுடைய பெயர்.இருப்பிடம் நிறம், மாலைகள், ஆதனம் கூறப்பட்டுள்ள அழகு நோக்கத்தக்கது.

பெயர்: சிவன் அயன் அரி
இருப்பிடம்: வெற்பு அலர் நீர்
நிறம்: எரி பொன் கார்
மாலை: கடுக்கை கமலம் துழாய்
ஆதனம்: விடை தோல் பறவை[2]

மும்மணிக்கோவை

இது திருவாரூரிற் சுந்தரர் முன்பு கோவிலிற் பாடியது. முப்பது செய்யுட்களை உண்ட்யது; அகவல், வெண்பர், கட்டளைக் கலித்துறை முறையே அமைந்தது. களவு, கற்பு என்ற இரண்டும் விரவப் பாடப்பெற்றது; ஒவ்வொரு பாவிலும் திருவாரூர் குறிக்கப்பெற்றது. ஒவ்வோர் அகவற்பாவும் (2, 4, 7, 10, 13, 25) அகநானூற்றுப் பாக்கள் போல முறையும் செறிவும் முடியும்


  1. S.67
  2. S.95