பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

பல்லவர் வரலாறு



அமையப்பெற்றது. பத்தாம் செய்யுளின் முதல் ஐந்து அடிகள்தலைவி வருத்த நிலையை அழகுறக் கூறுவன. இவ் வருணனை சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகியின் பிரிவு நிலையுடன் ஒப்பிடத்தக்கது. இதன்கண் ஆரூர், சிராமலை (10), திருக்கடவூர் (24) குறிக்கப்பட்டுள: தக்கன் வேள்வி (12), சிவன் யானை உரித்தது (28), மலைமகட்கு ஒரு கூறு தந்தது (28) ஆகிய கதைக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஞானவுலா

இது சிவபெருமான்முன் திருக்கயிலையிற் பாடியதென்பர். இந்நூல் படிக்கப் படிக்க இன்பம் தருவது. இதில் பல அரிய பொருள்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சில கீழே காண்க.

(1) சிவன், ‘அரியாகிக் காப்பான்; அயனாய்ப் படைப்பான் அரனாய் அழிப்பவனும் தானே.’

(2) சிவன், ‘எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள் கொடுப்பான்.’

(3) அக்கால இசைக் கருவிகள்-சல்லரி, தாளம், தகுணிதம், தத்தளகம், கல்லலகு. கல்லவடம், மொந்தை. சங்கம், சலஞ்சலம், தண்ணுமை, பேரி, குடமுழவம், கொக்கரை, வீணை, குழல், யாழ், தடாரி, படகம், மத்தளம், துந்துபி, முருடு[1] என்பன.

(4) ஏழு பருவ மங்கையர் வருணனை படித்து இன்புறத்தக்க பகுதியாகும். அவற்றில் சில வருமாறு:-

(1) மடந்தை ‘தீந்தமிழின் தெய்வவடிவாள்.’

(2) அரிவை, ‘தன் ஆவார் இல்லாத்தகைமையாள்.’

(3) அவள் ‘இன்னிசையும் இப்பிறப்பும் பேணும் இருந்தமிழும் மன்னிய வீணையையும் கைவிட்டாள்.'


  1. காரைக்கால் அம்மையார் மூத்த இருப்பதிகத்தில் வரும் இசைக்கருவிகளை நோக்குக.