பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவரைப் பற்றிய சான்றுகள்

15



நூற்றாண்டிற்குப் பிற்பட்ட நூல்களில் பல்லவர் குறிக்கப் பட்டுள்ளனர்; காஞ்சிமாநகரம் பல்லவர் ஆட்சியில் சிறந்த கோநகரமாக விளக்கம்பெற்றிருந்தது என்பது குறிக்கப்பெற்றுள்ளது. அப்பிற்பட்ட நூல்களைக் காலமுறைப்படி ஈண்டுமுறைப்படுத்திக் கூறுவோம்.

(1) லோக விபாகம்: இது திகம்பர சமண நூலாகும். இதில் (1) பாணராட்டிரத்தில் உள்ள ‘பாடலி’[1] என்னும் சிற்றுரில் சர்வநந்தி என்பவர் லோகவிபாகம் என்னும் நூலைத் திருத்தியமைத்தார்; (2) அங்ஙனம் இந்நூல் ஒழுங்காகச் செய்யப்பெற்ற காலம் காஞ்சி அரசன் சிம்மவர்மன் பட்டம் பெற்ற இருபத்திரண்டாம் ஆண்டாகும். அஃதாவது, சாக ஆண்டு 380; கிறித்துவ ஆண்டு கி.பி.458. எனவே, சிம்மவர்மன் என்ற பல்லவன் பட்டம் பெற்றயாண்டு 458-22 கி.பி.436 ஆகும்.[2]

(2) அவந்தி சுந்தரிகதை: இதுவும் வடமொழிநூல். முகவுரையில் பாரவி என்னும் வடமொழிப் புலவர் விஷ்ணு வர்த்தனன், துர்விநீதன், சிம்ம விஷ்ணு பல்லவன் எனக் கண்டு பரிசு பெற்றமை கூறப்பட்டுள்ளது. பாரவி பார்த்த மூவேந்தரும் ஏறக்குறைய ஒரே காலத்தவர் என்பதில் ஐயமில்லை துர்வந்தன் கி.பி.604 இல் அரசன் ஆனவன். கி.பி. 614இல் அரசன் ஆனான். ஆதலின், அவனது பல்லவன் காலமும் அதுவேயாகும்.[3]

(3) மத்தவிலாசப் பிரகசனம்: இஃது அப்பர் காலத்வானாகிய மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசனால் வரையப்பெற்ற சிறிய நாடகம். இதனில், அக்காலத்திய புத்தர், கபாலிகர், சமணர் முதலிய பல சமய மக்கள் பழக்க வழக்கங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இவன்காலம் கி.பி. 615-630[4] என்பது ஆராய்ச்சியாளர் துணிபு.

(4) சைவத் திருமுறைகள்:- அப்பர் பாடியருளிய 4,5,6 ஆம் திருமுறைகளில் பல்லவர் சமணர் பற்றிய குறிப்புகள்


  1. பாடலிக-பாடலிகபுரம், திருப்பாதிரிப்புலியூர்.
  2. Dr. S.K. Aiyangar’s “Some Contributions of South India to Indian Culture’ pp. 193-194.
  3. Dr. M. Venkataramanayya’s article on “Durvinita and Simha Vishnu’ in J.O.R.
  4. Ibid
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/35&oldid=583560" இலிருந்து மீள்விக்கப்பட்டது