பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று ஐயங்கள்

331



நோக்கப் பண்டை நகரப் பகுதிகள் சில இன்று வயல்களாக மாறிவிட்டமை நன்கு விளங்கும். இதனைக் கம்பனவுடையார் காலத்துக் கயிலாசநாதர் கோவிற் கல்வெட்டுகளும் மெய்ப்பித்தல் காணலாம்.

முடிவுரை

சுருங்கக்கூறின் காஞ்சிமாநகரம் ஏறத்தாழ 2500 ஆண்டுகளாகச் சிறப்புற்று விளங்கும் மாநகரம் என்னலாம். இது நகர அமைப்பில் இணையற்று இயங்குவது சமயத்துறையில் சிறப்புற்றுவிளங்குவது: வரலாற்றுத்துறையில் வளம்பெற்று இருப்பது. இப்பெருநகரம் பல மரபுகளைச் சேர்ந்த முடி மன்னர்களைக் கண்டது.[1] பல படையெடுப்புக்களைக் கண்டது. இதனை ஆண்ட அரசர் மறைந்தனர். இதன்மீது படையெடுத்த பார்மன்னரும் மறைந்தனர். ஆயின் காஞ்சி இன்றும் நின்று நிலவுகிறது. தனது பண்டை வரலாற்றைச் சிதைவுகள் வாயிலாகவும் கோவில்கள் வாயிலாகவும் தன்னடியில் மறைப்புண்டுவெளிப்படும் பொருள்கள் வாயிலாகவும் நமக்குப் புன்முறுவலோடு அறிவித்து நிற்கும் சாட்சி, வரலாற்று உணர்ச்சி உடையாருடைய கண்கட்கும் உள்ளத்திற்கும் பெரு விருந்தளிப்பதாகும்.


  1. “Of all the ancient palces in South India there is none that can rival the ancient Kanchi in the variety, antiquity and importance of ancient monuments. Here are Jaina and Buddhist, Saiva and Vaishnava temples of the Pallava, Chola and later times, Which it would be difficult to imagine in any other place” - K.N.Dikshit. Director-General of Archaeology in Indią, Memoris of the A.S. of India, No.63 (Preface)