பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவரைப் பற்றிய சான்றுகள்

23



பேரறிஞரான துப்ராய் துறைமகனார் ‘பல்லவர்’ என்னும் பெயர்கொண்ட ஆராய்ச்சி நூலை வெளியிட்டார். இவர், அதுகாறும் எவரும கண்டறியாத பல புதிய கல்வெட்டுகளையும் பல்லவர் சின்னங்களையும் கண்டு ஆராய்ந்து அரும்பாடு பட்டனர். இவர் ‘பல்லவர் சின்னங்கள்’, ‘பல்லவர் ஓவியம்’ என்னும் பெயர்கொண்ட வெளியீடுகளையும், ‘டெக்கானது பண்டை வரலாறு’ என்றும் ஆராய்ச்சி மிக்க நூலினையும், ‘தென் இந்தியப் படிமக்கலை’[1] என்னும் நூலையும் வெளியிட்டுள்ளார். இப்பெரியார் சிறப்பாகப் பல்லவர் வரலாற்றிற்குப் பெருந்துணை புரிந்தவர். இங்ஙனம் பல்லவர் வரலாற்றை வரைய முனைத்தவர் பலர் உளர். அவருள் நமது சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இருந்த டாக்டர் கிருட்டினசாமி ஐயங்கார் சிறந்தவர். இவர் 1923இல் ‘இந்திய வரலாற்று வெளியீடு’ என்னும் வெளியீட்டில் ‘பல்லவர் தோற்றமும் முற்பட்ட வரலாறும்’ என்னும் தலைப்பில் அரிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று வரைந்துள்ளார்.’ கோபிநாத ராவ், கே.வி. சுப்பிரமணிய ஐயர், அரங்கசாமி சரசுவதி முதலியோர்[2][3][4] வரைந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் சில. பேராசிரியர் பி.டி. சீனிவாச ஐயங்கார் தமிழில் ‘பல்லவர் சரித்திரம்’ வெளியிட்டுளார். 1928 இல் சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையில் ஆராய்ச்சி மாணவராக இருந்த திரு. ஆர். கோபாலன் என்பவர் பண்பட்ட ஆராய்ச்சி முறையில் பல்லவர் வரலாற்றை விளக்கமாக எழுதியுள்ளார். அவருக்குப் பின் பிரெஞ்சுப் பேரறிஞராகவுள்ள ஹீராஸ் பாதிரியார் பல்லவரைப் பற்றி அரிய ஆராய்ச்சி நூல் ஒன்றை வரைந்துள்ளார்.[5]


  1. “South India Iconography'
  2. Dr. Venkataramanayy’s articles on “The Date of Pallava Malla, “Durvinita and Vikramaditya I, “The place of Virakurcha in the Pallava Genealogy,” “Mahendravarman I & Pulikesin II etc.
  3. Mr. M.S. Sarma’s papers on “Nirupatunga’, The Chronology of the Later Pallavas’ etc
  4. T.N. Ramachandra’s paper on “The last days of Nirupatunga’ etc.
  5. Studies in Pallava History, (1934)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பல்லவர்_வரலாறு.pdf/43&oldid=583571" இலிருந்து மீள்விக்கப்பட்டது