பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
vi
பல்லவர் வரலாறு


கோட்பாடு இப்போது ஒருவாறு மாறிக் கொண்டு வருகிறது. அஃது என்ன எனில், எந்தக்குலம் அல்லது பரம்பரையை எடுத்துக்கொண்ட போதிலும் அவர்கள் வேறு நாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், அந்நாடு ஏறக்குறைய இந்தியாவிற்கு வடமேற்கில் இருக்கக் கூடும் என்றும் சொல்லி, அதற்காகப் பலவகைச் சான்றுகளைத் தேடிக் கண்டு பிடிப்பதே ஆகும். இவ்வகைக் கோட்பாடு பல்லவர் தொடக்கத்திற்கும் வருவிக்கப்பட்டது. ஆகவே, பெயரை நோக்கிப் பாரசீக நாட்டிற்கும் பல்லவர் தொடக்கம் கொண்டு போகப் பட்டது. அவ்வரசர்கள் வடமொழியில் அக்கரை எடுத்துக் கொண்டிருந்ததனால் இக்கூற்று வலியுறுத்தலும் செய்யப் பட்டது. ஆனால், ‘அம் மன்னர்கள் ஏன் தமிழ் மன்னர்களாக இருக்கக்கூடாது?’ என்பதுதான் இப்போது கேட்கப்படுகிற கேள்வி. அக் கேள்வியை மறுப்பதற்கு எதுவுமில்லை. ஒரு வேளை வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கூடியவரை தமிழர்களாகி விட்டார்கள் இருந்தாலும் அவர்கள் கூடியவரை தமிழர்களாகி விட்டார்கள் என்று அறிய வேண்டும். இங்கிலாந்தில் ஜார்ஜ் I ஜெர்மானியனாக இருந்த போதிலும் அவனது மரபு ஆங்கிலத்தில் கலந்து ஆங்கிலமாகி விடவில்லையா! அதுபோலவே பல்லவரும், ஒருவேளை, வெளி நாட்டிலிருந்து புகுந்திருந்த போதிலும் நாளடைவில் தமிழராகித் தமிழையே போற்றினார்கள். தமிழில் சைவ வைணவ இலக்கியங்களும் சமய மேம்பாடுகளும் அவர்கள் காலத்திலேயே தோன்றி உயர்வடைந்தன அல்லவா? உண்மையில் அம் மன்னர்களுடைய தொடக்கமும் தமிழ் மயமே என்பதற்கு எதிரிடை வாதம் யாதுமில்லை என்னலாம். ‘பல்லவர்’ என்ற சொல் தமிழ் அல்லவா? இப்போது பல் நீண்டுள்ளவனைப் ‘பல்லன்’, ‘பல்லவன்’ என்று கேலி செய்வதில்லையா அம் மன்னவரில் மூல புருடனுக்குப் பல் நீண்டு இருக்கலாம். அச்சொல் அம் மரபினர்க்கே வந்திருக்கலாம். இத்தகைய எடுத்துக் காட்டு சரித்திரத்தில் வந்திருக்கிறது. கருநாடகத்தில் ஆறு விரல் கொண்ட ஒரு மன்னனுக்கு அப்பெயர் நிலையத்திருக்கிறது. முடப் பாண்டியன், கூன் பாண்டியன், நெடுமாறன் முதலிய பெயர்கள் அவ்வாறே