பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
43
முதற்காலப் பல்லவர்


5. முதற்காலப் பல்லவர்
(கி.பி. 250-340)

முவகைப் பட்டயங்கள்

பல்லவர் பட்டயங்கள் பிராக்ருதம், வடமொழி, கிரந்த தமிழ் என மூவகை மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. எனவே, மொழிவல்லுநர் இவற்றை நன்கு ஆய்ந்து, முதலில் வெளிப் பட்டவை பிராக்ருதப் பட்டயங்கள்; பின்னர் வெளிப்பட்டவை வடமொழிப் பட்டயங்கள்; இறுதியில் வெளிப்பட்டவையே கிரந்த-தமிழ்ப பட்டயங்கள் என்னும் முடிவிற்கு வந்துள்ளனர். அவர்களே, பிராக்ருத மொழியில் தீட்டப்பட்டுள்ள பட்டயங்கள் கி.பி. 3, 4 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை; வடமொழிப் பட்டயங்கள் கி.பி. 4,5,6 ஆம் நூற்றாண்டிலிருந்து கணக்கிடத்தக்கவை. என்றும் முடிவு கூறியுள்ளனர். இம் முறைப்படி ஆராயின், பல்லவர் பட்டயங்கள் மூவகைப்படும். அவற்றுள் முதலன பிராக்ருத மொழியின. அவற்றின் காலம் கி.பி. 3,4ஆம் நூற்றாண்டுகள் ஆகும். மற்றவை மேற்சொன்ன இரண்டு காலங்களைச் சார்ந்தவை ஆகும். ஆகவே, நாம் (1) பிராக்ருத மொழியில் பட்டயங்களை வெளியிட்ட பல்லவரை முற்காலப் பல்லவர் (கி.பி. 250-340) என்றும், (2) வடமொழியில் பட்டயங்களை வெளியிட்ட பல்லவரை இடைக்காலப் பல்லவர். (கி.பி. 340-575) என்றும், (3) கிரந்த தமிழ் மொழியில் பட்டயங்களையும் கல்வெட்டுகளையும் வெளியிட்ட பல்லவரைப் பிற்காலப் பல்லவர் (கி.பி. 575-900) என்றும் இந்நூலுள் அழைப்போம்.

பிராக்ருத பட்டயங்கள்

முற்காலப் பல்லவர் பட்டயங்களில் சிறந்தவை முன்றே ஆகும். அவை: (1) மயிதவோலு-பட்டயங்கள், (2) ஹிரஹத கல்லிப் பட்டயங்கள், (3) குணபதேயப் பட்டயங்கள் என்பன. இவை