பக்கம்:பல்லவர் வரலாறு.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44
பல்லவர் வரலாறு


மேனாட்டு அறிஞரால் நன்கு ஆராயப்பட்டுத்தக்க விளக்கவுரைகள் பெற்றவையாகும். இப் பட்டயங்கள் தம்மை விடுத்தவர் பெயர்களைக் குறிப்பிட்டு, தாம் எழுந்த காரணத்தையும் குறிப்பவை ஆகும். ஆதலின், இவற்றைக்கொண்டு முற்காலப் பல்லவர் பரம்பரை, போர், நாகரிகம், அரசியல் முதலிய வரலாற்றுக்குரிய செய்திகளை நன்கு அறியக்கூடவில்லை.

முதற்காலப் பல்லவர் நாடு (கி.பி. 250-340)
Page64-776px-பல்லவர் வரலாறு.pdf.jpg


ஆந்திர பதமும் தொண்டை நாட்டின் வடபகுதியும் இக்காலப் பல்லவர் நாடாக இருந்தன.


(1) மயிதவோலு-பட்டயம்.

இது பல்லவர் மரபினனும் பாரத்வாச கோத்திரத்தைச் சேர்ந்தவனும் ஆன இளம் பேரரசன் (யுவமகாராசன்) சிவஸ்கந்த